பெண்வீட்டார் சீரைப் பார்த்து மயங்கி வீழ்ந்த மாப்பிளை
ஆந்திராவின் அருகாமையில் அமைந்துள்ள புதுவையின் அங்கமான ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான சீர் கொடுத்து அசத்தியுள்ளார்.
தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்து கொள்வதால் மகிழ்ச்சி அடைந்து ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள் என வண்டி வண்டியாக மணமகன் வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்து வந்ததுள்ளதை மக்கள் அச்சரியத்துடன் அவதானித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தங்களது மகளை மிகவும் அன்புடன் மருமகன் கவனித்து வருவதால் எங்கள் அன்பை காட்டும் விதமாக சீர் செய்துள்ளோம்.
இனிப்பு, காரம், சத்துள்ள உலர் பழங்கள், மசாலா பொருட்கள், காய்கறிகள், அசைவங்களான ஆடு, கோழி, மீன் மற்றும் கடல் உயிரினங்கள்,மளிகை பொருட்கள் என கொடுத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.