அரிதான தாவரமாக மாற்றம் பெறும் கற்றாழை!

Nila
3 years ago
அரிதான தாவரமாக மாற்றம் பெறும் கற்றாழை!

கற்றாழை (Aloe vera) பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும்.

தமிழில் இந்தத் தாவரம் கற்றாழை, கத்தாழை, குமரி, கன்னி என அழைக்கப்படுகிறது.

இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் விளையும் பயிராகும்.

நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.

கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்டது. மேலும் கிரேக்கம் பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது. இந்த இனத்தாவரம் ஆபிரிக்காவில் அதிகமாக வளரக்கூடியதாக இருக்கிறது.

கற்றாழையானது இலங்கையை பொறுத்தவரையில் அதிகம் அழிக்கப்பட்டு வரும் ஒரு மருந்தாகும். இதனால் இலங்கையைப் பொறுத்த வரையில் கற்றாழையின் முக்கியத்துவமானது அதிகரித்து வருகின்றது.

கற்றாழையானது புற்றுநோய், வயிறுஎரிவு (அல்சர்), மூலநோய் போன்ற நோய்களிற்கான நிவாரணியாக விளங்குகின்றது.

இலங்கையைப்பொறுத்த வரையில் கற்றாளையானது 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கற்றாழையின் தேவையானது படிப்படியாக அதிகரிக்கும் பொழுதே அதனுடைய மகத்துவம் எம் மக்களிற்கு தெரியவருகின்றது.

பொதுவாக தமிழர் தாயகத்தைப் பொறுத்த வரையில் பெண்கள், ஆண்களடைய முகங்களானது செயற்கைப்பூச்சுக்களால் விகாரமடைந்ததாக மாறிவருகின்றது. இவ்வாறான செயல்கள் எமது பண்பாட்டிற்கு ஒவ்வாததாகவே காணப்படுகின்றது.

இந்நிலைகள் மாறவேண்டும் என்றால், பெண்கள், ஆண்கள் தங்கள் முகங்களை அழகுபடுத்த வேண்டும் என்றால் இயற்கை தந்த கொடையான கற்றாழையைப் பயன்படுத்துதல் சிறந்த தெரிவாக இருக்கும்.

மேலும் இன்றைய வெப்ப சூழ்நிலையில் கற்றாழை மூலம் தயாரிக்கப்படும் கற்றாளை பானமானது மக்களால் அதிகம் விரும்பப்படுவதாகவும் வெப்பத்தை தணிக்கும் ஒரு பானமாகவும் காணப்படுகின்றது.

கற்றாழை பானமானது போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதோடு உடனடி பானமாகவும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

கற்றாழை இனங்கள், அதிகமாகத் தோட்டங்களிலும் அலங்கார செடிகளாகச் சட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன. கற்றாளை இன செடிகள் பல, மிகவும் அழகு நிறைந்ததாகவும் அலங்கார செடியாகவும் இருக்கும். சதைபற்றான தாவரங்களைச் சேகரிப்பவர்களுக்கு இந்த வகை தாவரம் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் காணப்படும்.

கற்றாழையானது இன்று தமிழர் தாயகத்திலே அதிகம் விளைகின்ற பயிராகக் காணப்படுகின்றமை எமது தேசத்துக்கான பாெருளாதார பலத்தை வழங்குகின்றது.

ஆனால் இன்றைய காலப்பகுதியில் தமிழர் மாவட்டங்களில் விளையும் கற்றாழையை வேற்று பிரதேசத்தவர்கள் அதிகமாக அபகரிக்க ஆரம்பித்துள்ளனர். உதாரணமாக ஒரு மாதத்திற்கு முன்னர் பொன்னாலையில் நடந்த சம்பவமானது தென்னிலங்கையைச் சேர்ந்த சில நபர்களால் கற்றாழையானது அனுமதி இன்றி அபகரிக்கப்பட்ட போது ஊர்மக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர்.

அந்நிய இனத்தவன் மத்தியில் கற்றாழை பற்றி ஏற்பட்டுள்ள தெளிவானது எம்மினத்தவன் மத்தியில் இதுவரையும் ஏற்படவில்லை.

இன்று தமிழ்ப் பிரதேசங்களில் கற்றாழையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழ்க் குடிமகனிற்கும் உண்டு.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!