இரவில் தூங்குவதற்குமுன் பின்பற்ற வேண்டிய சில பழக்கவழக்கங்கள் என்னென்ன?

Nila
2 years ago
இரவில் தூங்குவதற்குமுன் பின்பற்ற வேண்டிய சில பழக்கவழக்கங்கள் என்னென்ன?

தூங்குவதற்கு முன்னால் ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாக கைபேசியை உபயோகிப்பதை தவிர்க்கவும்.

தூங்க போன உடனே பெட்டில் பொத் என்று விழ கூடாது.

முதலில் உக்கார்ந்து சாமி கும்பிட்டு…பொறுமையாக…கால்களை நீட்டி நேராக படுத்து இன்றைக்கு காலையில் இருந்து என்ன செய்தோம்.. என்பதை மனசில் ஒரு படம் போல ஓட்டி பார்க்கவும்..அந்த படம் ஓடி முடிவதற்குள் உங்களுக்கும் தூக்கம் கண்களை தழுவ ஆரம்பித்து விடும்…

அதற்கென்று நெட்பிலிக்ஸ் அமேசான் போன்று எடுத்து ஓட்டி விடாதீர்கள்…

இரவு சாப்பிட்ட உடன் படுக்க வேண்டாம்…8 மணிக்குள் இரவு உணவை முடித்து கொள்ளுங்கள்..

சாப்பிட்ட உடன் காலாற நடந்து உங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்…

நாளை என்ன செய்ய வேண்டும் ஏது செய்ய வேண்டும் என்பதை to do லிஸ்டில் நோட் செய்து கொள்ளுங்கள்…ஏனென்றால் வாழ்க்கையில் தேடல்கள் அதிகமானது…

தூங்குவதற்கு முன்பாக இசை கேளுங்கள்.. அதற்கென்று பிலிவர், ஷெரன் போன்ற பாடல்களை கேட்க வேண்டாம்…உங்கள் மனதிற்கு பிடித்த இசை…கர்நாடக சங்கீதம்…புல்லாங்குழல் இசை…நமது இளையராஜாவின் இசைகள் என ஏராளம் கேட்கலாம்…

ஒரு மனிதனுக்கு 8 மணி நேரம் தூக்கம் அவசியம் அதனால் போனை DND மோடில் 8 மணி நேரம் போட்டு விட்டு தூங்குகள்.

சாப்பிட்ட உடன் ஊரில் உள்ள அம்மா அப்பா மனைவி மற்றும் நண்பர்கள் உறவினர்கள் என யாருக்கு பேச வேண்டுமோ…அவர்கள் சின்னதாக ஒரு போன் மொறுவலோடு போனே செய்து நலம் விசாரித்து தூங்க சென்றால் இன்னம் சிறப்பு…

தூங்குவதற்கு முன் பற்களை துலக்க வேண்டும் என்பது ஒரு மருத்துவ ஆய்வின் தகவல்…பின் பற்ற வேண்டும் நினைப்பார்வைகள் பின் பற்றலாம்..

சாப்பிட்டு முடித்த கையோடு வாய்க்குள் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கொப்பளித்து கொள்ளுங்கள்.

சாப்பிட்டு முடித்த கையோடு சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்து விடுங்கள்…காலையில் உங்களுக்கு ஒரு வேலை குறைந்து போகும்.

தூங்குவதற்கு முன்பு வீட்டின் எல்லா பகுதிகளுக்கும் சென்று நன்றாக கதவு ,ஜன்னல் அடைத்து உள்ளீர்களா என்று சரி பார்த்து கொள்ளவும்…