பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ..!

பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ..!

சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ???  (chicken biryani in tamil seimurai) பிரியாணி என்றாலே அசைவ பிரியர்களுக்கு பிடித்த மசாலா உணவு வகைகளுள் ஒன்று. எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி என்று (biryani recipe in tamil) படித்தறிவோம் வாங்க..!

  • சிக்கன் – 1 கிலோ
  • அரிசி – 1 கிலோ
  • எண்ணெய் – 100 கிராம்
  • தக்காளி – 500 கிராம் (நறுக்கியது)
  • தயிர் – 1 கப்
  • சிவப்பு மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • நெய் – 150 கிராம்
  • இஞ்சி – 1 1/2 ஸ்பூன்
  • பூண்டு – 1 1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை – 1 கப்
  • புதினா – 1 1/2 கப்
  • பச்சை மிளகாய் – 5
  • பிரியாணி இலை, பட்டை கிராம்பு, ஏலக்காய் – தேவையான அளவு
  • வெங்காயம் – 500 கிராம் (நறுக்கியது)
  • தனியா தூள் – 1 தேக்கரண்டி
  • கலர் பொடி – 1 சிட்டிகை

தம் பிரியாணி செய்வது எப்படி:

முதலில் அடுப்பில் பெரிய பாத்திரத்தை வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி அதனுடன் கொஞ்சம் நெய் சேர்க்கவும், எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பாதி போட்டு பொன்னிறமாக பொரித்து வைத்துக்கொள்ளவும்.

  1.  பின்பு அந்த பத்திரத்திலேயே பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு வதக்கவும், நன்கு வதங்கியதும், அதனுடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும் பச்சை வாசனை நீங்கியதும், வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக கிளறவும்.
  2. பிறகு பாதி அளவு கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலையை போட்டு நன்றாக வதக்கவும்.
  3. இதனுடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறிவிடவும்.
  4. அதன் பிறகு சிக்கன், தயிர், தனியா தூள், 1/2 மூடி எலுமிச்சை சாறு, தக்காளி மற்றும் மீதமுள்ள கொத்தமல்லி மற்றும் புதினா இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி வேகவிடவும்.
  5. சிக்கன் நன்றாக வெந்தவுடன் அதாவது எண்ணெய் திரண்டு மேலே வரும்போது அப்போது 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் சுடு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  6. முக்கியமாக அரிசியை 20 நிமிடம் நன்றாக ஊறவைத்து வடிகட்டி வைக்க வேண்டும்.
  7. தண்ணீர் நன்றாக கொதித்ததும் கலர் பொடி, தேவையான அளவு உப்பு மற்றும் வடிகட்டி வைத்துள்ள அரிசியை போட்டு நன்றாக கிளறிவிட்டு, அரிசி அரை வேக்காடு வேகும் வரை தீயை அதிகமாக வைத்து கொள்ளவும்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!