7ல் சுக்கிரன் இருந்தால் திருமணம் நடக்காதா?

#Astrology
7ல் சுக்கிரன் இருந்தால் திருமணம் நடக்காதா?

ஒருவருடைய சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமணம் மிகவும் தாமதமாக நடக்கும், அல்லது திருமணமே நடக்காது என்றும் இல்லற வாழ்க்கைக்கு உகந்த ஜாதகம் இல்லை என்று  ஜோதிடர்கள் சொல்லும் கருத்தால் எனது ஜாதகத்தை,பெண் வீட்டார் அனைவரும் பெண் தர மறுக்கின்றனர், அல்லது ஜாதகத்தை தவிர்த்து விடுகின்றனர் ,எனவே எனக்கு திருமணம் நடக்குமா? அல்லது நடக்காதா,? 

 பொதுவாக ஒரு ஸ்தான அதிபதி சம்பந்தப்பட்ட ஸ்தானத்தில் அமர்ந்தால் பாவ நாஸ்தி என்ற முறையில் பாரம்பரிய முறையில் பலன் சொல்லுவது முற்றிலும் தவறான முறை இதில் பல விதி விளக்குகள் உள்ளன.

 ஒரு பாவகத்தை பற்றி பல நிர்ணயம் செய்யும் பொழுது நன்கு கவனமுடன் ஆராய்ந்து நிர்ணயம் செய்வது ஜாதகருக்கும், ஜோதிடனுக்கும் நன்மை தரும் ,பொது விதிகளின்  படி கணிதம் செய்து பலன் சொல்வது  ஜோதிட உண்மைக்கு புறம்பான  தவறுகள் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

 மிதுனம், கன்னி, தனுசு, மீன லக்னத்திற்கு களத்திர பாவத்தில் அமர்ந்து சுக்கிரனால் நன்மையே 100% சதவிகிதம் நடைபெறும் என்பதில் சந்தேகமே இல்லை ,மேலும் களத்திர பாவத்தில் சுக்கிரன் அமர்ந்தாலும் களத்திர பாவகம் நன்றாக இருக்கும் பட்சத்தில் ,ஜாதகருக்கு நிச்சயம் திருமண வாழ்க்கை இளம் வயதில் சரியான நேரத்தில் ,நல்ல முறையில், வசதி வாய்ப்புகளுடன் நல்ல மனைவியாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

 பொது பலன், பொது விதி என்றுமே சுய ஜாதகத்தை கட்டுப்படுத்தாது என்பதை அன்பர்கள் அனைவரும் கவனத்தில் கொள்வது மிகுந்த நன்மை தரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!