ஆரோக்கிய உணவு உட்கொள்ளல் எப்படி?

#Health
ஆரோக்கிய உணவு உட்கொள்ளல் எப்படி?

(இந்தக் குறிப்பு பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

சகல மானிடரும் தங்கள் வளர்ச்சிக்கும் உடல் நலத்தை பேணுவதற்கும் உணவு உட்கொள்ள வேண்டும். ஆனால் மானிடர்களுக்கு உணவின் அளவானது குழந்தைகள், பிள்ளைகள், இளம் வயதினர், மற்றும் முதியோர் என வேறுபடும். உதாரணமாக குழந்தைகளுக்கு 4 மணிக்கு ஒரு தடவை உணவை ஊட்ட வேண்டும். வளர வளர அவர்கள் மேலும் வலுவான உணவை உட்கொள்ள ஆரம்பிப்பார்கள். படிப்படியாக அவர்கள் இடைக்கிடை சிற்றுண்டி வகைகளையும் சேர்த்துக்கொள்வார்கள். இதை இதன் பின்வரும் வயதினரும் செய்ய ஆரம்பிப்பார்கள்.

நாம் எப்படி ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

  • நாம் தினமும் ஆரோக்கிய உணவை உட்கொள்ள வேண்டும். அதாவது காலை, மதியம் மற்றும் இரவு என உட்கொள்ள வேண்டும். இங்கே இரவு உணவின் அளவானது மிகையாக இருத்தலாகாது.
  • மிகை உணவாக பழங்கள், மரக்கறி வகைகள், தானியங்கள் மற்றும் கொழுப்பற்ற கொழுப்பு குறைந்த பாற்பொருட்கள்.
  • இதனோடு இறைச்சி, மீன், அவரை, முட்டை, மற்றும் விதைகள் ஆகியவற்கை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். முதலில் குறைவான அளவெடுத்து பசிக்கேற்ற விதத்தில் அதனை நிறுத்திக்கொள்ளலாம்.
  • சிற்றுண்டிகள் உண்பது பரவாயில்லை ஆனால் அவை பழங்கள், முழு தானியங்கள், மற்றும் கடலை வகைகள் ஆக இருக்க வேண்டும். மேலும் இவை அதிக எடையை கூட்டுவனவாக இருத்தலாகாது.
  • சோடா பானங்கள் மற்றும் சீனி சேர்ந்த குளிர்பானங்கள் இவற்றை தவிர்த்துக்கொள்ளுங்கள். இவை அதிக கலோரிகள் கொண்டதுடன் மேலும் பசியையும் மேலதி உணவுத் தேவையையும் துாண்டவல்லது.
  • துாங்குமுன் அதிக அளவு உண்வை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் இவை இரைப்பையை விரிவடைய செய்து உடல் எடையை அதிகரித்துவிடும்.
  • ஒருவர் கோபமாகவோ அல்லது மன அழுத்தத்திற்கு உட்பட்டோ இருந்தால் உணவெடுத்தல் மேலும் சிக்கலை விரிவு படுத்துமேயொழிய தீர்வாக அமையாது.
  • சிறுவர்கள் பிள்ளைகளுக்கு இனிப்பான சிற்றுண்டிகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும். பின்னர் இவை அவர்களுக்கு பழகி விடும்.
  • கோடை காலங்களில் மிகவும் வலுக்கூடிய உணவை உட்கொள்ள வேண்டாம்.
  • சைவ உணவு வகைகள் எடையை குறைக்க வல்லதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். ஆனால் அதில் போதியளவு விற்றமின்கள், கனியுப்புகள், மற்றும் இரும்பு இருத்தல் அவசியம்.
  • 165 பரனைட்குக்கு மேலே சமைப்பதனை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், காரணம் அதில் இருக்கவல்ல நன்னை தரவல்ல பக்ரீயாக்கள், நுண்ணங்கிகள் அழிந்துவிடக்கூடும். பழங்களை உட்கொள்வதானால் அவை ஓடுகின்ற பாதுகாப்பான குழாய் நீரில் நன்கு கழுவிக்கொள்ள வேண்டும்.
  • பச்சையாக அல்லது சமைக்காத இறைச்சி வகைகளை உட்கொள்ள வேண்டாம்.

முக்கிய குறிப்புக்கள்

  • நீரிழிவு நோயாளிகள் மேற்கூறிய முறைகளை கையாள்வதுடன் குருதியில் குளுக்கோஸின் மட்டத்தினை கவனமாக பேண வேண்டும்.
  • இரவு வேலை, பாடசாலை மாணாக்கர், மற்றும் இராணுவத்தினர் காலை, மாலை, இரவு உணவை எடுப்பதுடன் குறைவான சிற்றுண்டிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • சமையலில் ஈடுபடுவோர் கொழுப்பை குறைக்கவல்ல எண்ணெய் வகைகளை பயன்படுத்தலாம்.
  • எடையை குறைப்பதில் ஈடுப்பட்டுள்ளோர், கொழுப்பு, எண்ணெய் வகைகள், தவிர்த்து பழம் மரக்கறி மற்றும் விதைகள் ஆகியவற்றை உண்ண வேண்டும்.
  • ஏதும் உங்கள் எடையை கட்டுப்படுத்துவதில் அல்லது குளுக்கோஸ் மட்டம்்பேணல் போன்ற பிரச்சினைகள் வரின் ஒரு மருத்துவரை அணுகுதல் சிறந்தது.