கருமையான சருமமா? இதோ இருக்கிறது பப்பாளிப்பழம்!
அநேகமான பெண்கள் தாங்கள் கருப்பாக உள்ளதைப்பற்றி மிகுந்த கவலை கொள்கிறார்கள். இதைப்பற்றி எமது சக நண்பிகளிடமோ எமது சுற்றத்திலோ இவ்வாறு சிலர் தங்களது நிறத்தை பற்றி குறை கூறுவதை கேட்டிருக்கின்றோம்.
சில நேரங்களில் நிறம் குறைந்தவர்கள் கொஞ்சம் நிறமைானவர்களை கண்டுவிட்டால் போதும் தாங்கள் மட்டும் ஏன் இவ்வாறு கருப்பாக இருக்கிறோம் என்று மனதளவில் நினைத்து வேதனைப்படுவார்கள்.
சிலர் கருப்பாக இருக்கும் தங்களது சருமத்தை நிறமாக்கிக்கொள்ள ப்ளீச் செய்து கொள்வதையும் நாம் அவதானித்தும் இருக்கின்றோம்.
கருமையான சருமம் என்பது வெறுக்கத்தக்க சருமம் அல்ல. ஆயினும், கருப்பான சருமமானது. அனைவர் மத்தியிலும் மதிப்புக் குறைந்த மதிக்கப்படுகிறது.
இதற்கு காரனம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை தான். கருமை நிறமான சருமம் கொண்டவர்களே அதிக ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்டவர்கள் என்பது பல விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவுகளின் படி தெரியவருகிறது.
ஆகவே, கருமையான சருமம் கொண்டவர்களும் அழகானவர்களே. ஆயினும் இதற்கு நாம் அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. நாம் வீட்டில செய்யும் பேஷியல்கள் மூலமும் ஒரளவு இதிலிருந்து சிறந்த பயனைப்பெறலாம்.
நாம் எப்போதும் முகத்திற்கு பேஷியல் ஒன்றை இடத்தயாராகும் முன் முகத்தில் இருக்க வல்ல அழுக்குகளை துடைத்தெடுக்க வேண்டும். இதற்கு நாம் மொய்ஸடரைஸர் உபயோகிக்கலாம். பின் நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக்கொண்டு, அதை வைத்து முகத்திற்கு மென்மையான மசாஜ் கொடுக்கவும்.
அத்தோடு மசாஜ் செய்கின்ற போது தோடம்பழச்சாற்றையும் சேர்த்து கைககளை அதில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக்கலவை, இரண்டு துளிதேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.
வெயிலில் செல்கிற போது சன்ஸ் கிறீம்களை உபயோகிக்கலாம். அதே போல் கைகளுக்கு கிளவுஸ் அணிவது சருமத்தை பாதுகாக்கும்.
மேலும் பச்சைக்காய்கறிகள். பழங்களை. இளநீர். பால். தயிர். போன்றவற்றை உட்கொள்வதாலும் நாம் எமது மேனியின் நிறத்தை மெருகேற்றிக்கொள்ளலாம்.