பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம்

#Women #Horoscope
Reha
3 years ago
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம்

ஜனன ஜாதகத்தில் எட்டாமிடம் ஆண்,பெண் இருவருக்கும் பொதுவாக ஆயுளை குறிக்கும் இடமாக இருந்தாலும் பெண்களுக்கு தனது தாலி பாக்கியத்தை அறியக்கூடிய இடமாக அமைகிறது. பெண்களின் மாங்கல்ய ஸ்தானமாக எட்டாமிடம் விளங்குகிறது.

8 ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானமாக விளங்க காரணம்?

பொதுவாக ஏழாமிடம் என்பது கணவனை குறிக்கும் ஸ்தானமாகவும், இரண்டாமிடம் மாரக ஸ்தானமாகவும் வரும்.

எட்டாமிடம் என்பது ஏழாமிடத்துக்கு இரண்டாமிடமாக வருவதால் கணவருடைய மாரக ஸ்தானமாக வருகிறது.

திருமணப் பொருத்தம் பார்பதில் இந்த எட்டாமிடம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

எட்டாமிடம் எப்படி கெடும்?

  • பெண்களின் ஜாதகத்தில்  8 ல் பாவகிரகமான செவ்வாய்,ராகு,கேது,சூரியன்,சனி போன்ற கிரகங்கள் அமர்ந்து இருப்பது.
  • 8 ஆம் இடத்தை ஒன்றுக்கு மேற்பட்ட பாவகிரகங்கள் பார்வை செய்வது
  • 8 ஆம் அதிபதி நீசம் அடைவது
  • 8மிட அதிபதி லக்னத்துக்கு 6,12 ல் மறைவது
  • 8 மிட அதிபதியுடன் 6,12ஆம் அதிபதி இணைவது
  • 8ம் அதிபதி சூரியன் அல்லது ராகுவுடன் மிகவும் நெருங்கி தனது பலத்தை இழப்பது
  • 8 ஆம் அதிபதியுடன் பாவ கிரகங்களான சூரியன்,ராகு,கேது,செவ்வாய்,சனி இணைவது
  • 8 ஆம் அதிபதியை ஒன்றுக்கு மேற்பட்ட பாவகிரகங்கள் இணைந்து பார்வை செய்வது
  • போன்ற நிலைகள் ஒரு பெண்ணின் ஜாதக அமைப்பில் இருந்து அதை சுப கிரகங்கள் பார்வை இடமாமல் இருந்தால் அந்த பெண்ணிற்கு முதல் திருமணம் சிறக்காது.

 

உதாரணமாக 

  • ஓரு பெண்ணின் ஜாதகத்தில் எட்டாமிடத்தில் பாவகிரமான சுப தொடர்பு இல்லா சனி  இருப்பதாக கொண்டால் அந்த பெண்ணிற்கு திருமணம் ஆனவுடன் சில ஆண்டுகளில் சனி தசா நடைபெற்றால் சனியின் பார்வை இரண்டாமிடத்துக்கு கிடைக்கும்
  • இரண்டாமிடம் என்பது ஏழாமிடத்துக்கு எட்டாமிடமாக வருவதால்(கணவரின் ஆயுள் ஸ்தானமாக) கணவரை இழக்கும் சூழ்நிலையை உருவாக்கி விடும்.
  • எட்டாமிடம் மற்றும் இரண்டாமிடம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ள ஸ்தானங்களாக விளங்குகிறது.
  • இதனால் ராகு, கேதுக்கள் 1,2,7,8ல் இருப்பதை தோஷமாக கருதி சர்ப தோஷம் என்று அதற்கு நிகரான ஆண் ஜாதகத்தை இணைக்கிறோம்.
  • எனது முந்தைய பதிவில் இரண்டாமிடத்தில் கிரகங்கங்கள் உச்சம் பெற்றால் கணவருக்கு ஆகாத நிலை குறித்து விவரித்து உள்ளேன்.
  • எட்டாமிடம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சந்தர்ப்ப வசத்தால் திருமணம் நிகழ்ந்து விட்டால்  என்ன நிகழும்? 
  • எட்டாமிடம் பலம் இழந்த பெண்ணை தகுந்த தோஷ சாமானியமில்லா ஆண் ஜாதகத்துடன் இணைத்தால் அந்த ஆணிற்கு ஆயுள் பாவம் வலுத்து இருந்தால் விவாகரத்து ஏற்பட்டு பிரிவு ஏற்படும்.
  •  ஆயுள் பாவம் குறைந்து இருந்தால் திடீர் என்று திருமணம் ஆகியவுடன் நோய்வாய் பட்டோ அல்லது விபத்திலோ மரணம் அடைய நேரும்.
  • பெண்ணிற்கு மறுமணத்தை குறிக்கும் 11ஆம் இடம் நல்ல முறையில் இருந்தால் மறுமணம் நிகழும்.
  • பெண்ணிற்கு செவ்வாய் களத்திரக்காரனாக விளங்குவதால் செவ்வாயுடன் சூரியன் சேர்ந்து மேல் சொல்லப்பட்ட அமைப்பும் இருந்தால் இளம் வயதில் கணவரை இழக்கும் சூழ்நிலை உருவாகும்.

கணவனுக்கு முன் மரணம்:

ஒரு பெண்ணின் ஜனன ஜாதகத்தில் எட்டாமிடத்தில் அசுப கிரகங்கள் அமர்ந்து இருந்தாலும் இரண்டாமிடத்தில் சுபகிரகங்கள் அமர்ந்து எட்டாமிட அதிபதிக்கும் சுபர் பார்வை கிடைத்துவிட்டால் தீர்க்க சுமங்கலியாக கணவனுக்கு முன் மரணம் அடைய நேரும்.