ரிஷப ராசிக்காரருக்கு எப்போது நல்ல காலம் பிறக்கிறது? விபரம் உள்ளே..
சகல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஆடம்பர கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியின் ஆளுகையின் கீழ் வருகிறது. சந்திரனின் சாரம் பெற்றுள்ள இந்த நட்சத்திரம், பால்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எந்த வித்தையையும் விரிவாகக் கற்றுக்கொள்வதில் வல்லவர்கள்.பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.
ஜாதக அலங்கார நூல், ‘நீரதிக தாகமுளன்; சொன்னது கேட்பான்; புலவன்; நிருபன்...’ என்கிறது. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோர், பழரசம், இளநீர், பசும்பால், போன்ற பானங்களை விரும்பி அருந்துபவராகவும் கார வகைகளை விரும்பாதவராகவும் இருப்பார்கள் என்கிறது.
பெரியோரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பவராகவும், மொழிப் பாடங்களில் பண்டிதராகவும் பசித்தவர்க்கு உணவு தருபவராகவும் விளங்குவார்கள் என்பது இதன் பொருள்.
நட்சத்திர மாலை என்னும் நூல், வருங்காலத்தை உணரும் ஆற்றலைப் பெற்றும், பெண்களுக்குப் பிரியமானவராகவும், தங்கத்தால் செய்த ஆபரணங்களையும் விலை உயர்ந்த ரத்தின ஆபரணங்களையும் விரும்பி அணிபவராகவும் விளங்குவார் என்கிறது. யவன ஜாதகப் பாடல், ‘ஸூருப ஸ்திர...’ என்கிறது. அதாவது, அழகானவராகவும் ஸ்திர புத்தியுடையவராகவும் இருப்பார்கள் எனக் கூறுகிறது.
- இவர்கள், அமைதியான வாழ்க்கையையே அதிகம் விரும்புவார்கள்.
- மெல்லிய குரலில் பேசுவார்களே தவிர, அதிர்ந்து பேசமாட்டார்கள்.
- தெளிந்த அறிவுடனும் அதி நுட்ப மதியுடனும் எந்த ஒரு செயலையும் செய்வார்கள்.
- இவர்கள் செய்யும் செயல்களைக் கண்டு பகைவர்கள்கூட வியப்படைவர். ஆடை, அணிகலன்களில் தனி கவனம் செலுத்துவார்கள்.
- தவறுகள் செய்யத் தயங்குவார்கள். ஆகவே, எப்போதும் நேர்மையாக இருப்பதையே விரும்புவார்கள்.
- பேச்சில் ஒளிவு மறைவு என்பதே இருக்காது.
- சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவராகவும் இருப்பார்கள்.
- அளவற்ற செல்வம் திரண்டு இருக்கும்.
- எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டே இருப்பார்கள்.
- இவர்களில் சிலர் கவிதை, கட்டுரை, கதை, நாடகம் ஆகியவற்றை எழுதுவார்கள்.
- பெரும்பாலோர் திரைத் துறையில் பெரிய கலைஞர்களாக இருப்பார்கள்.
- நிர்வாகத் திறமை இல்லாவிட்டாலும், சிலர் மாபெரும் தொழிலதிபராக இருப்பார்கள்.
- முதலாளியாக இருந்தாலும் சிறிதும் கர்வம்கொள்ளாமல் தொழிலாளியைத் தனக்குச் சமமாக நடத்துவார்கள்.
- கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு, பாராட்டு பெறுவார்கள்.
- விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகம் இருக்கும்.
- குறிப்பாக, இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் எப்போதும் தன் மனைவிக்கு விட்டுக்கொடுத்துப் போகிறவராக இருப்பார்கள்.
- பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள்.
- சுகபோக வாழ்க்கையை வாழும் இவர்களுக்கு, கூடவே சோம்பேறித்தனமும் அதிகமாக இருக்கும்.
- இரக்க குணம் இவர்களிடம் வஞ்சமில்லாமல் இருக்கும்.
- சண்டை போடும் இரு தரப்பினரையும் இனிமையான பேச்சால் சமாதானப்படுத்தி ஒற்றுமை ஏற்படச் செய்வார்கள்.
- அடிக்கடி தண்ணீர் குடிக்கவும், அதிக நேரம் நீராடவும் விரும்புவார்கள்.
- ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
- இருப்தேழு நட்சத்திரங்களில் நான்காவது இடத்தை பெறுவது ரோகிணி நட்சத்திரமாகும்.
- இதன் அதிபதி சந்திர பகவானாவார்.
- இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது.
- இது உடலில் முகம், வாய், நாக்கு, மற்றும் கழுத்து பகுதிகளை ஆளுமை செய்கிறது.
- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஓ,வ,வி, வு ஆகியவை. தொடர் எழுத்துக்கள் வா, வீ ஆகியவை.
குண அமைப்பு;
ரோகிணி நட்சத்திரம் தாய்க்கும் தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படத்தும் என்ற பொதுவான கருத்து ஒன்று உண்டு.
சகல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஆடம்பர கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் வருவதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த விதமான கலையாக இருந்தாலும் எளிதில் கற்றும் கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள் தண்ணை நம்பியவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் பெண்கள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாகவும் பொன் பொருள் மீது அதிக ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
அதி நுட்ப மதியுடனும் தெளிந்த அறிவுடனும் எந்த வொரு செயலையும் செய்வார்கள்.
பகைவர்களை கூட நண்பர்களாக்கி கொள்ளும் ஆற்றல் இருக்கும். இனிமையான பேச்சாற்றலும் பின்னால் நடப்பதை முன் கூட்டியே அறிவும் திறனும் உண்டு.
பேச்சில் ஒளிவு மறைவு என்பதை இருக்காது.
எப்பொழுதும் நேர்மையாக வாழ விரும்புவதால் தவறுகள் செய்ய தயங்குவார்கள்.
விட்டு கொடுக்கும் மனப்பான்மை அதிலும் எப்பொழுதும் கற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டே இருப்பார்கள்.
குடும்பம்;
- இந்த நட்சத்திர காரர்களுக்கு விட்டு கொடுக்கும் குணம் உண்டு என்பதால் குடும்பத்தில் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும்.
- சண்டையே வந்தாலும் இனிமையாக பேசி சமாளித்து விடுவீர்கள். செல்வம் செல்வாக்கு நிறைந்திருக்கும்.
- எப்பொழுதும் கூட்டத்திலேயே இருக்க விரும்புவதால் சமுதாயத்திலும் நல்ல மதிப்பிருக்கும்.
- இவர்களுடைய பேரும் புகழும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மையளிப்பதாக இருக்கும்.
- எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள்.
- நினைத்ததை நினைத்தப்படி அடையும் ஆற்றல் உண்டு.
- காதலிலும் விடாபடியாக கடைசி வரை நின்று திருமணம் செய்வார்கள்.
- பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். சுகபோக வாழ்க்கையை விரும்பும் இவர்களுக்கு சோம்பேறி தனமும் உடன்பிறந்ததாகும்.
தொழில்;
- ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாக திறமை இல்லாதவராக இருந்தாலும் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள்.
- முதலாளியாக இருந்தாலும் சிறிதும் கர்வம் கொள்ளாமல் தொழிலாளர்களையும் தங்களுக்கு சமமாக நடத்துவார்கள்.
- கவிதை கட்டுரை, கதை,நாடகம் ஆகியவற்றை எழுதுபவர்களாகவும், திரை துறையில் பெரிய கலைஞர்களாகவும் இருப்பார்கள்.
- உணவு விடுதி, ரெஸ்டாரண்ட், லாட்ஜ் ஒனர்களாகவும், பால் பண்ணை மற்றும் கரும்பு சார்ந்த துறைகளில் வல்லுனர்களாகவும் இருப்பார்கள்.
- விற்பனை செய்தல் போன்ற துறைகளிலும் இவர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு.
- சமையல் கலை நிபுனர்களாகவும் இருப்பார்கள். இரும்பு வியாபாரமும் செய்வார்கள்.
நோய்கள்;
- ரோகிணியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் உச்ச ராசியான ரிஷபராசி என்பதால் அடிக்கடி ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்.
- முகப்பரு, கண், மூக்கு, தொண்டைகளில் பிரச்சினை, மூட்டு வலி போன்றவற்றால் பாதிக்கபடுவார்கள்.
திசைப்பலன்கள்;
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசை சந்திர திசையாகவரும். சந்திர திசை மொத்தம் 10 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கொண்டு மீதமுள்ள வருடங்களை கணக்கிட்டு கொள்ளலாம். சந்திர திசை காலங்களில் பிறப்பதால் உடல் நிலையில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும்.
இரண்டாவது திசையாக வரக்கூடிய செவ்வாய் திசையில் மொத்த காலங்கள் ஏழு வருடங்களாலும் இத்திசை காலங்களில் கல்வியில் மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சற்று முன் கோபமும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும்.
மூன்றாவது திசையாக வரும் ராகு திசை காலங்களில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். கல்வியில் தடை, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய அமைப்பு கொடுக்கும். தேவையற்ற நட்புகளாலும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். முன் கோபமும் பிடிவாத குணமும் இருக்கும்.
நான்காவது திசையாக வரும் குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் வாழ்வில் பல சாதனைகள் செய்யும் அமைப்பு, சமுதாயத்தில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு, பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
ஐந்தாவதாக வரும் சனி திசை பத்தொன்பது வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் பல சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் பெயரும் புகழும் உயரும். செல்வம் செல்வாக்கு பெருகும்.
ஆறாவதாக வரும் புதன் திசை மாரகதிசை என்றாலும் புதன் பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையுடனிருந்தால் நற்பலனை அடைய முடியும். மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரி கோணங்களில் சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் நற்பலனை அடையலாம். இல்லையெனில் சில சங்கடங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த நட்சத்திரத்தை டிசம்பர் மாதத்தில் இரவு பன்னிரண்டரை மணியளவில் வானத்தில் காணலாம். ரோகிணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நாவல் மரம். இம்மரத்தை வழிபாடு செய்தால் நற்பலன்களைப் பெற முடியும்.
செய்ய வேண்டிய நற்காரியங்கள்;
பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், பூ முடித்தல், திருமணம் சம்மந்தம் செய்தல், குழந்தையை தொட்டிலிடல், பெயர் சூட்டுதல், வாசல் கால் வைத்தல், புது மனை புகுதல், வங்கி கணக்கு தொடங்குதல், மாடுகள் வாங்குதல், கதிர் அறுத்தல், கல்வி கற்றல், புத்தகம் வெளியிடல், விதை விதைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புனித யாத்திரை செல்லுதல் நல்லது.