தும்மலைப் போக்கும் கற்பூரவல்லி தேநீர்

#Health
தும்மலைப் போக்கும் கற்பூரவல்லி தேநீர்

முன்பெல்லாம் தும்மினால் ஆயுசு நூறு என்று மகிழ்ந்த சமூகம், இன்று யாரேனும் தும்மினால் கொலைக் குற்றவாளியைப் போல் பார்க்கிறது.

கொரோனாவின் லீலைகளில் இதுவும் ஒன்று. தும்மல் உங்களை சங்கடப்படுத்துவதாக நினைத்தால் கற்பூரவல்லி தேநீரை சுவைத்துப் பாருங்கள்.

இதற்கு கற்பூரவல்லியுடன் சிறிது தேன் மட்டும் போதும். ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன், கற்பூரவல்லியின் இலைகளை நீக்கிவிட்டு தண்டுகளை மட்டும் சேகரியுங்கள்.

அவற்றை சிறுசிறு துண்டுகளாக்கி நசுக்கியபிறகு கொதிக்க வைக்கவும்.

பின்பு வடிகட்டி தேன் சேர்த்தால் கற்பூரவல்லி தேநீர் தயார்.

 இந்த தேநீரை தினமும் உணவுக்கு முன்பு எடுத்து வர தலைநீரேற்றம், தலைவலி சரியாகும். தலை நீரேற்றத்தின்போதுதான் கடுமையான வலி, அடிக்கடி தும்மல் இருக்கும். மூக்கில் அரிப்பும் ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு கற்பூரவல்லி தேநீர் அற்புதமான பலனை தருகிறது.      

மேலும்“ஓமவல்லி’னுகூட இன்னொரு பேர் இதுக்கு இருக்கு. கற்பூரவல்லி இலைய சாதரணமா அப்படியே எடுத்து மென்னு சாப்பிடலாம்.

இல்லேன்னா தேனோட சேர்த்தும் சாப்பிடலாம். இந்த இலைய தேங்காய், பருப்பு, மிளகாய்வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அரைச்சு சட்னியாக சாப்பிடலாம்.

இந்த இலைய சாறெடுத்து நல்லெண்ணெய் சர்க்கரையோட சேத்து நல்லா கலக்கி நெற்றியில பற்றுப்போடலாம்.

அப்படி செஞ்சா ஜலதோஷத்துனால வர்ற தலைவலி நீங்கும். குழந்தைகளுக்கு வர்ற அஜீரண வாந்திய இந்த மூலிகை நிறுத்தக்கூடியது.

வயிறு சம்பந்தப்பட்ட நோய்க்கும் இளைப்பு நோய்க்கும் உள்மருந்தா இது பயன்படுது. கண் அழற்சி ஏற்படும்போது இந்தக் கற்பூரவல்லி இலைச்சாற மேல் பூச்சா தடவினால் குணம் தரும்.

அதிகப்படியான கபம் பிரச்சனை இருக்குறவங்களுக்கு, சளி வெளியே வர்றதுக்கு, இந்த இலைய அரைச்சு தண்ணி கலந்து கொதிக்க வச்சு, ஏலக்காய், கிராம்பு, அதோட ஒரு ஸ்பூன் தேன் கலந்து மூன்று நாள் தினமும் இரண்டு வேள குடிச்சா நல்ல பலன் கிடைக்கும்.

கற்பூரவல்லி இலையை சூடான தண்ணியில போட்டு ஆவி பிடிச்சாலும் நெஞ்சு சளிக்கு குணமளிக்கும்.

கற்பூரவள்ளியை உங்கள் வீட்டிலும் வளர்க்கலாம்

கற்பூரவள்ளியை மத்திய தரைக்கடல் மற்றும் துணை வெப்பமண்டல காலநிலையிலும் நடலாம். நன்றாக வளர சிறிது வெப்பம் தேவை. வெப்பமான கோடை மாதங்களில் இலைகள் புதியதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க அடிக்கடி நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது.
கொல்லைப்புறத்தில் பல்வேறு பாரம்பரிய மூலிகைகள் கொண்ட ஒரு தீவிர தோட்டக்காரராக நீங்கள் இருந்ததால் 6 வயதிலிருந்தே இந்த தாவரத்தை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு பானையில் கூட கற்பூரவள்ளியை வளர்க்கலாம்.