கொத்தமல்லி விதைகளை தேநீராக தினமும் அருந்துவதால் உண்டாகும் பலன்கள்
#Health
Reha
3 years ago
- கொத்தமல்லி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண் அரிப்பு, கண் அழற்சி மற்றும் கண் சிவத்தல் ஆகியவற்றை சரி செய்கிறது.
- தனியாவை தேநீராக தினமும் அருந்துவது நமக்கு முழுமையான பயன்களை தரும். நீரிழிவு தொந்தரவு இருப்பவர்கள் 10 கிராம் அளவு தனியாவை தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை அருந்தினால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
- தனியாவை தேநீராக தயாரிக்கையில் 20 தனியாவை இரவு முழுக்க ஊறவைத்து காலையில் அந்த தண்னீரில் தேவையான அளவு தேயிலை, சுக்கு லேசாக சேர்த்து கொதிக்கவைத்து இனிப்புச்சுவைக்காக நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி அல்லது தேன் போன்ற ஏதேனும் ஒன்றினைக் கலந்து தேநீராகத் தயாரித்து அருந்தலாம்.
- மல்லி விதையை தேநீராக தினமும் காலையில் அருந்தி வரலாம். இதன்மூலம் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுகிறது. வாயு மட்டுமல்லாது சளி, இருமல், மைக்ரேன் தலைவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் முதலான பல நோய்களை போக்க வல்லது.
- கொத்தமல்லி விதை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகிறது. மேலும் அலர்ஜி சார்ந்த பிரச்னைகள், உடல்வலி, மாதவிடாய் மற்றும் ஹைப்பர் டென்ஷன் பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது. ஹார்மோன் சமநிலைக்கும் மல்லி விதை உதவி செய்கிறது.
- வைட்டமின் சி, பொட்டாசியம், மினரல் போன்றவை தனியாவில் மிகுதியாக அடங்கியிருக்கிறது. இரைப்பை சார்ந்த பிரச்னைகளான அசிடிட்டி, உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்று வலி, வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.