10.09.2021 இன்றைய ராசி பலன்

#Astrology
Keerthi
3 years ago
10.09.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: நல்ல செய்தி வருவதில் தாமதம் ஏற்படும். நிம்மதியான நாள்.
பரணி: புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும்
கார்த்திகை 1: சற்று குழப்பத்துடனும், மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள்

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: அமைதியும் நிம்மதியும் நிறையும். தாயால் நன்மை வரும்.
ரோகிணி: பேச்சினால் பிரச்னையில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: வாகனத்தைச் சீரமைப்பீர்கள். வேலை பளு அதிகமாகும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: வருமானம் உயரும். உறவினர்களின் பொறாமை வெளிப்படும்.
திருவாதிரை: மிதமான நலன்கள் உண்டு. யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: குழந்தைகளை மகிழ்வித்து மகிழ்வீர்கள். பயணம் செல்வீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: குடும்பம் மகிழும். உயர்தோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
பூசம்: செல்வம் சேருவதில் தாமதம் ஏற்படும். வீடு மாற வாய்ப்புள்ளது.
ஆயில்யம்: உங்களது பேச்சினால் குடும்பத்தினருக்கு நன்மை ஏற்படும்.

சிம்மம்: 
மகம்: கடந்த காலச் செய்கை ஒன்று பற்றிய மன உறுத்தல் நீங்கும்
பூரம்: நீங்கள் தேடிக்கொண்டிருந்த நல்ல வாய்ப்பு தானாக வரும்.
உத்திரம் 1: இளைஞர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மகிழ்ச்சி கூடும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: உடல்நலம் சீராகும். தன்னம்பிக்கை கூடும். பழிகள் அகலும்.
அஸ்தம்: பெரியோரின் செயல்கள் மூலம் நன்மை அடைவீர்கள்.
சித்திரை 1,2: குடும்பத்தில் யாருக்கேனும் திருமணம் நிச்சயமாகும்.

துலாம்: 
சித்திரை 3,4: தவறான நபர்கள் தானாக விலகிப் போவார்கள்.
சுவாதி: புதிய விஷயம் ஒன்றைக் கற்று பலன் அடைந்து மகிழ்வீர்கள்.
விசாகம் 1,2,3: புதியவர்களின் அறிமுகம் கிடைத்து நன்மை அடைவீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மருத்துவம் மூலம் அகலும்.
அனுஷம்: குடும்பத்தில் பலநாட்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயம் நடைபெறும்.
கேட்டை: அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அரசின் ஆதரவு உண்டு.

தனுசு: 
மூலம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். ஆதரவுப் பெருகும்.
பூராடம்: சகோதர, சகோதரியுடன் ஒற்றுமை பிறக்கும். மனம் மகிழும்.
உத்திராடம் 1: பாராட்டுப் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருளை பரிசளிப்பீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: மனதில் மகிழ்ச்சி தங்கும். தந்தைக்கு நன்மை உண்டாகும்.
திருவோணம்: மனதில் தன்னம்பிக்கை துளிர்விடுவதால் வெற்றி பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2: உற்சாகம் கூடும். அலுவலக பணிகளில் கவனமாக இருங்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பணப்புழக்கம் அதிகரிக்கும். அமோகமான நாள்.
சதயம்: பணியில் தடைகள் வரலாம். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத்துணைக்கு அலுவலகத்தில் நன்மை வரும்.

மீனம்: 
பூரட்டாதி 4: பணியிடத்தில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி: எதிலுமே தடைகளும், தாமதங்களும் இருந்து பின் சரியாகும்.
ரேவதி: பிறரிடம் பேசும்போது அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம்.