தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கப்பூரில் ‘மக்கள் முதல்வர்’ பட்டம்

#India #M. K. Stalin
Yuga
3 years ago
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கப்பூரில் ‘மக்கள் முதல்வர்’ பட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சிங்கப்பூரில் ‘மக்கள் முதல்வர்’ என் பட்டத்தை அளித்துச் சிறப்பித்துள்ளார்கள்.

பழைய திருச்சி மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சிங்கப்பூரில் புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர்களும், நிரந்தரவாசிகளும், பணியாற்றுபவர்களும் தங்கள் பகுதியில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற வரலாற்று சின்னம் கட்டப்பட்டதனால் பெருமையடைந்து.

அதைக் கட்டிய மாமன்னர் இராஜேந்திர சோழன் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு ‘அரசு விழாவாக’ ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், சிவசங்கரன் அவர்களுக்கும் கடந்த மாதம் 29 ஆம் திகதி மாலை இணையம் வழியாக நடைபெற்ற பன்னாட்டு சான்றோர் 25 பேர் பங்கேற்ற கூட்டம் வாயிலக நன்றியறிதலைத் தெரிவிப்பதற்காக கூடியிருந்த போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

சிங்கப்பூர் வரலாற்று மரபுடைமைக் கழக ஒப்புதல் பெற்று இந்த தீர்மானத்தை முன்மொழிகிறோம் என புதுமைத்தேனீ மா. அன்பழகன் தெரிவித்தார்.இவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்றைய நாளில் பார்க்கும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு மக்கள் முதல்வராக இருந்து எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும், பலதுறை விற்பன்னர்களில் அறிவுரை பெற்றும் ‘தான்’ எனும் அகந்தை இல்லாமலும், நடுவு நிலையுடன் செயற்படும் அதிகாரிகளின் துணைகொண்டும், நேர்மையான காவல்துறை அதிகாரிகளின் உறுதுணையுடனும், எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மையோடும், சமூக நீதி காத்தும் ஊழலற்ற திறமையான ஆட்சியைக் கொண்டு நடத்தி தமிழ்நாட்டு மக்களின் மனங்களை வென்று வருகிறார்.

இதன் மூலமாக தமிழக மக்களோடு உலகெங்களிலும் பரவி வாழும் தமிழர்களின் வயிறுகளில் பால் மட்டுமற்றி தேனையும் சேர்த்து ஊற்றிகொண்டிருக்கிறார் இன்றைய தமிழக முதலமைச்சர் அவர்கள்.

பகுத்தறிவுள்ள பகலவன் தந்தை பெரியாரின் சமூக நீதி, பெருந்தலைவர் காமராசரின் கல்விக் கொள்ளை, எளிமை, அறிஞர் அண்ணா மும்மொழிந்த மாநில சுயாட்சி, முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்வறியாத உழைப்பு, உறவுகளுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு கைகொடுப்போம் எனும் தாரக மந்திரம் அத்துடன் மக்கள் தலைவர் எம்.ஜி.யாரின் இரக்கமுடைமை, ஜெயலலிதா அம்மையாரின் துணிவுடைமை ஆகியவற்றையெல்லாம் மனதிற்தங்கி செயலாற்று இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று மக்கள் எதிர்ப்பாக்கின்ற மக்களுக்குத் தேவையான தனக்கு வாக்களித்தவர்கள் மகிழ. வாக்களிக்காவர்கள், வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ண வைக்கும் அளவிற்கு பொது மக்களின் ஊழியராய்ப் பணியாற்றி வருகிறார்.

எதிர்த்தரப்பினரும், ஊடகங்களும், ஏழை எளிய மக்களும் குறிப்பாக பெண்களும் சமூக நீதியால் புறக்கணிக்கப்பட்டவர்களும். என அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்படுகின்ற அளவுக்கு அல்லும் பகலும் தன் முழுசிந்தனையையும், செயற்பாட்டினையும் காட்டி உழைத்து வருகிறார்.

மாமன்னர் பிறந்தநாளை அரசு விழாவாக அறித்ததற்காக மட்டுமல்லாது, இந்த பகுதி இந்த இனம், இந்த மொழி, இந்த மதம் என்று பாராது, சமூக நீதி காத்து உழைத்து வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.