தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை!

Prabha Praneetha
3 years ago
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை!

தமிழகம் முழுவதும் சுமார் 40,000 முகாம்கள் மூலம் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.  மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரேநாளில் 28,20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 40,000 முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.

* 18-44 வயது 16,00,195 பேருக்கும், 45-40 வயது 8,69,741 பேருக்கும் ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது.

* 60 வயதுக்கு மேற்பட்ட 3,47,164 பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 3.79 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்த நிலையில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சென்னை 1,85,370, கோவை 1,51,685, திருப்பூர் 1,21,634 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருவள்ளூர் - 1,01,213 குறைந்தபட்சமாக விருதுநகரில் 21,029 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சி 1,10,332, தஞ்சை 1,10,120, மதுரை 1,05,036 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மரத்தான் வேகத்தில் செயல்படும் மா.சுப்பிரமணியன், டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவதவர்கள் செலுத்திக்கொள்ளுங்கள், நம்மையும், நாட்டையும் காப்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.