ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளது – மோடி
பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு உத்திரபிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”பாதுகாப்பு துறையில் இறக்குமதியை சார்ந்திருந்த இந்தியா, இன்று பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
நாடு மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவில் இருந்து போர்கப்பல்கள், ட்ரோன்கள், விமான உதிரிபாகங்கள் மற்றும் நவீன குண்டுகள் உற்பத்தி செய்யப்படுவதை பார்க்கின்றன.
பாதுகாப்பு துறை சார்ந்த ஏற்றுமதியில் இந்தியா, புதிய அடையாளத்தை நோக்கி முன்னேறுகிறது. ஒரு காலத்தில் நிர்வாகத்தை குண்டர்கள் கையில் எடுத்தனர். ஊழல் செய்தவர்களின் கைகளில் ஆட்சி இருந்தது. தற்போது அவர்கள் சிறையில் உள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.