தனுசு , சிம்மம் ராசிக்காரர்கள் எப்படியானவர்கள் தெரியுமா...?
ஒவ்வொருவரிடம் ஆளுமையும், தைரியமும், நகைச்சுவையும், கூச்ச சுபாவமும், பயமும் என பல செயல்பாடுகள் முக்கிய குணநலன்களாக இருக்கும்.
இதில் சில குணங்கள் பலவீனமாகவும், சில குணங்கள் ஒருவருக்கு பலமாகவும் அமைந்திருக்கும். அப்படி ஒருவரிடம் இருக்கும் பலமாக பார்க்கப்படும் குணம் தைரியம்.
ஜோதிட அடிப்படையில் எந்த ராசியினர் மற்றவர்களை விட சற்று தைரியத்துடன் எந்த ஒரு நிலையிலும் செயல்படுவர் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியினர் தைரியசாலிகள் மற்றும் எதற்காகவும் அச்சப்படாதவர்கள் என கருதப்படுகிறது. ஏனெனில் ஒருவருக்கு பலம், தைரியம், ஆற்றல் தரக்கூடிய செவ்வாய் பகவான் இந்த ராசிக்கு அதிபதியாக இருப்பது முக்கிய காரணம்.
மோசமான சூழலில் கூட இவர்கள் பயப்படாமல் தைரியத்துடன் செயல்படுவதோடு, முன்னேற்றத்திற்கான சூழலைத் தேடுவார்கள். அதுமட்டுமல்லாமல் மற்றவர்களின் மனதில் இருக்கும் பயத்தையும் நீக்கக்கூடியவர்கள்.
சிம்மம்
ஆளுமை, தைரியம், அச்சமற்றவர்கள் என இவர்களைக் குறிப்பிடலாம். நவகிரக தலைவர் சூரியன் ஆளக்கூடிய சிம்ம ராசியினர் கடினமான சூழலைக் கூட சுயமாக சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவர்கள். இவர்களிடம் தலைமைத்துவம் அதிகம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் பார்க்க அமைதியாக இருப்பது போல் தோன்றினாலும், அவர்களுக்கும் தைரியம் குறைவு இல்லை. அவர்கள் தங்கள் பணியை முடிக்க எந்த கடினமான சூழ்நிலையையும் சந்திக்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அவர்களிடமும் தைரியம் மற்றும் அச்சமின்மையை நிறைந்திருப்பதைக் காணலாம்.
தனுசு
குரு ஆளக்கூடிய தனுசு ராசியினர் எந்த ஒரு சூழலிலும் நம்பிக்கையைக் கைவிடாமல், அச்சமில்லாமல் செயல்படுவர். இவர்கள் அபாயகரமான வேலையைச் செய்வதைக் கண்டு பயப்படுவதில்லை, மாறாக ரசிக்கிறார்கள். எந்த சூழலையும் சந்திக்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள். இருப்பினும் நீங்கள் வாழ்க்கையில் எந்தவிதமான ஆபத்தான முடிவுகள், செயலில் இறங்கும் முன்பு சிந்திப்பது அவசியம்.
கும்பம்
சனி பகவான் ஆளக்கூடிய கும்ப ராசியினரிடம் தைரியத்திற்குப் பஞ்சமிருக்காது. இவர்கள் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பக்கூடியவர்கள். அதோடு அச்சமில்லாமல் எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கத் தயங்குவதில்லை. சரியாக தங்கள் வேலையை செய்து முடிக்கும் திறன் உள்ளதால், யாரிடமும், எதற்காகவும் பயப்படுவதில்லை.