கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் - ஆய்வில் தகவல்

#India
Keerthi
3 years ago
கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் - ஆய்வில் தகவல்

138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு' என பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடுகளில் கொரோனா குறித்து பகிரப்படும் தவறான செய்திகள் உண்மையானதா அல்லது பொய்யானதா என கண்டறியும் வகையில் 94 அமைப்புகள் இந்த ஆய்வில் ஈடுபட்டன.

இதில் இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தால் கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இணையம் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும், சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும்  இது நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியான ஆய்வில் கூறப்படுவதாவது:-

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில், சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 சதவீத  பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளது. இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தாலும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் இவ்வாறு நடைபெறலாம்.

கொரோனா குறித்து தவறான தகவல்கள் பகிரப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா(15.94), அமெரிக்கா(9.44), பிரேசில்(8.57), ஸ்பெயின்(8.03) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!