தேன் நிலவும் தவறான நம்பிக்கையும்...
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
நாம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக பார்ப்பது திருமணமான தம்பதிகள் கொண்டாட தேன் நிலவு ஏற்பாடு செய்வது.
தேன் நிலவு என்றால் இளம் தம்பதிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேறொரு இடத்திற்கு அதாவது ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது.
இதை தான் நாம் தெரிந்து வைத்துள்ளோம். உண்மையில் இது பிழையானது.
தேன் நிலவு என்பது கிரேக்கர்களுடைய பழக்கம் இது தான் ஆங்கிலத்தில் ஹனி மூன் என்று வந்து.. நமக்கு தேன் நிலவாக மாறியுள்ளது.
ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே அர்த்தமாக இருக்கும்.. தேன் நிலவு - ஹனி மூன்..
இது எப்படி உருவானது தெரியுமா?
ஆரம்பத்தில் கிரேக்கர்கள் மாதத்தை கணக்கிட நிலவை வைத்தே கணிக்கிறார்கள்.. அரேபிய நாகரீகத்தை போல..
ஒரு முழு நிலவை கணக்கிட்டு அதிலிருந்து அடுத்த நிலவை ஒரு மாதமாக கணக்கிட்டு கொள்கிறார்கள்.
இந்த ஒரு மாதத்திற்கு அதாவது திருமணம் முடிக்க இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மஞ்சள் தேன் கலந்த ஒரு விதமான பானத்தை பருக செய்கிறார்கள்..
முக்கியமாக தேன்..
ஒரு மாதம் தேன் கலந்த பானத்தை தினமும் குடிக்க வேண்டும் பின்னர் தான் திருமணம்.
இது இவர்களது பழங்கால கலாச்சார வழிமுறை...
ஒரு நிலவில் இருந்து அடுத்த நிலவு வந்த பிறகு திருமணம்.
இது தான் தேன் நிலவு என்று ஆகிற்று ..
இன்றைய தேன் நிலவுக்கும் இவர்களுடைய பழக்கத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?