100 கிராம் வெண்டைக்காய் சாப்பிட்டால் ஏற்படும் அற்புதங்கள்.
Shelva
3 years ago
பலருக்கும் பிடித்த உணவாக இருக்கும் வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் நடக்கின்றன. ஏனெனில் வெண்டைக்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள்.
- கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெண்டைக்காயை தாராளமாக சாப்பிடலாம்.
- ஏனெனில் வெறும் 100 கிராம் வெண்டைக்காயில் 66 கலோரிகளே உள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
- வெண்டைக்காயில் உள்ள அந்த வழவழப்புத் திரவம் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
- கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் ஆசிட் வெண்டைக்காயில் இருக்கிறது.
- எனவே கர்ப்பிணிகள் அதன் வழவழப்பு திரவம் குறையாமல் வாரம் 2 முறையேனும் சமைத்து சாப்பிடலாம்.
- சர்க்கரை நோய், மலச்சிக்கல், புற்றுநோய், அனீமியா, பார்வைக் குறைபாடு, வயிற்றுப் புண் என பல நோய் , உடல் உபாதைகளுக்கும் வெண்டைக்காய் சிறந்த துணையாக உள்ளது.
- சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கின்றன.
- இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும்.
- மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.