கருப்பு உளுந்தில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும் !!
இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது கருப்பு உளுந்தினை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் உளுந்து தோலில் குளுக்கோனஸ் ஸ்டாக் பெசன்ட் ஆறடிஸ் என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது.
இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுதான் காரணம்.
அதே போல் இதில் கால்சியமும், பாஸ்பரசும் சம அளவுல உள்ளது. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டும் என்று உளுந்து தோளினை நீக்கி அதில் உள்ள ஊட்டச்சத்து இழக்க வேண்டாம்.
கருப்பு உளுந்து முழுதாகவோ இரண்டாக உடைக்கப்பட்டோ அரைக்கப்பட்டு இட்லி தோசை மாவில் பயன்படுத்தப்படுது மிகவும் நல்லது. இட்லி சிறந்த உணவு என்று பெறுவதற்கு மாவில் சேர்க்கப்படும் உளுந்தும், மிகவும் முக்கியமிக்க காரணமா அமைகிறது.
பெண்களின் உடலுக்கு வலிமை தரும் என்பதனால் அதிகமா பரிந்துரைக்கப்படுது. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது பெண்களுக்கு உகந்தது, மாதவிடாய் மட்டுமல்லாமல் மாதவிடாய் காலத்துல ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும். தாய்ப்பால் பெருக, உளுந்து பயன்படும்.
இனிப்பு சுவையோடு குளிர்ச்சி தன்மை கொண்டிருப்பதால் கோடை காலத்தில் அதிகமாக பயன்படுத்தலாம்.
பித்தத்தை தணிக்க உதவுகிறது.முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு மிகவும் நல்லது.
இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருப்பதனால் உடலை தூய்மைப்படுத்தி உடலில் உள்ள நச்சுப் பொருட்கள அகற்றி செரிமான அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்கவும், வயிற்றுப்போக்கை தடுக்கவும் உதவுகிறது.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துக்கொண்டு வருவதன் மூலமாக இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.