அடுத்த மாதம் 22 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு வழங்கப்படும் - சீரம் நிறுவனம்

Prabha Praneetha
2 years ago
அடுத்த மாதம் 22 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு வழங்கப்படும் - சீரம் நிறுவனம்

டிசம்பர் 31-ம் திகதிக்குள் 66 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசிகளைத் தயாரித்து வினியோகித்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் மத்திய அரசுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் மொத்தம் 21 கோடியே 90 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வழங்கப்போவதாக அந்நிறுவனம் நேற்று தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் சீரம் நிறுவன இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் கூறுகையில், தடுப்பூசி உற்பத்தி திறனை நாங்கள் அதிகரித்துள்ளோம். 

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மத்திய அரசுக்கு இதுவரை 66 கோடிக்கு மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகளை வழங்கி இருக்கிறோம்.

ஏற்கனவே பெற்ற ஆர்டரின்படி டிசம்பர் 31-ம் திகதிக்குள் 66 கோடி தடுப்பூசி வழங்குவோம். 

இத்துடன் இந்த ஆண்டு 130 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்கிய பெருமையை பெறுவோம் என தெரிவித்தார்.

மிகுதியாக இருக்கும் தடுப்பூசிகளை அடுத்த மாதத்தில் இருந்து ஏற்றுமதி செய்வோம் என மத்திய சுகாதாரத் துறை மந்திரி கூறிய நிலையில், சீரம் நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது.