மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..

Prabha Praneetha
3 years ago
 மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..

சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில் ‘டாஸ்மாக்’ கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘மதுபான கடைகளில் ’ ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவதாக மதுபிரியர்கள் மனவேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். 

எனவே மதுகடைகள் முன்பு விலைபட்டியல் வைக்கப்பட வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தாலும், ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் அதனை பொருட்படுத்துவது இல்லை என்பது மதுபிரியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.


இந்தநிலையில் கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், அனைத்து மண்டல சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், ‘ஏற்கனவே அறிவுறுத்தியபடி ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில்படும்படி விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும். 

மது விற்பனைக்கு பற்றுச்சீட்டு ரசீது பில் புத்தகம் மூலம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 

இதனை கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது துறைரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!