தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா?

Reha
2 years ago
தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா?
  • பொதுவாக நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.
  • எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.அதனால் தான் தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அப்படி செய்வதால் உடலில் உண்டாகும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
  • சிறுநீர் மஞ்சள் அல்லது அடர்ந்த நிறமாக இருந்தால் நீங்கள் இன்னும் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும். போதுமான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • தசையை வளர்ப்பதில் வொர்க் அவுட் செய்தால், தசைகள் தண்ணீர் இல்லாமல் இருக்கும் போது அந்த தீவிரத்தை பெற முடியாது. நீரேற்றமாக இருக்க உடல் செயல்பாடுகளுக்கு முன் எட்டு அவுன்ஸ் தண்ணீர் குடிக்கவும். 
  • சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுகளை திரவ வடிவில் வெளியேற்றும் வேலை செய்கிறது. அதை சரியாக செய்வதற்கு அதற்கு போதுமான தண்ணீர் தேவைப்படுகிறது. நீண்ட நாட்கள் நீரிழப்புடன் இருந்தால் சிறுநீரகங்கள் வேலை செய்வது கடினமாக இருக்கும். 
  • சிலர் எப்போதும் சோர்வாக இருப்பதால் காஃபைன் பக்கம் திரும்பலாம். ஆனால் காஃபைன் போன்றது நீரேற்றமில்லாமல் இருந்தால் ஆற்றல் மட்டங்களில் நன்மை பயக்கும் விளைவுகளை உண்டாக்காது. எனவே ஆற்றலை மேம்படுத்த தண்ணீர் குடிப்பது அவசியம். 
  • வயதாவதற்கு முன்பே உண்டாகும் சுருக்கம் போக நீங்கள் தினமும் தண்ணீர் குடிக்க வேண்டிய சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • உடலில் ஒரு பகுதியில் நீரேற்றம் இல்லாவிட்டால் மலத்தை வெளியேற்றுவது கடினமாக இருக்கும்.எனவே போதுமான தண்ணீரை எடுத்து கொள்வது நல்லது. 
  • தண்ணீர் நிறைவாக குடிப்பதன் மற்றொரு நன்மை ஜலதோஷத்தை தடுக்கவும் தீவிரமாகாமலும் தடுக்கும்.
  • தலைவலி பிரச்சனையை கொண்டிருந்தால் அதற்கு காரணம் நீரேற்றம் குறைவாக இருப்பதால் உண்டாகலாம். நல்ல நீரேற்றம் தலைவலி உண்டாவதிலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும். 
  • உடல் செயல்பாடுகளின் போது நெற்றியில் வியர்வை வருவது நல்ல விஷயம். இது உங்கள் உடல் சாதாரண வெப்பநிலையை பராமரிக்கும் வேலையை செய்கிறது அதே நேரம் போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் தீவிரமான உடற்பயிற்சியின் போது வியர்வை வெளியேறாமல் இருக்கலாம்.