மருந்தே இல்லாமல் ரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்...

Reha
3 years ago
மருந்தே இல்லாமல் ரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்...

பொதுவாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். ஏனெனில் இது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே  ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு சில எளிய வழிகளை இங்கே தெரிந்து கொள்வோம்.
வஜ்ராசனம், மலாசனம், தண்டாசனம், விருக்‌ஷாசனம் போன்ற யோகாசனங்கள் குறைந்த ரத்த அழுத்த பிரச்சினையை கட்டுப்படுத்தக்கூடியவை. இவற்றை தொடர்ந்து செய்து வரலாம்.

உப்பில் உள்ளடங்கி இருக்கும் சோடியம் இயற்கையாகவே ரத்த அழுத்த அளவை அதிகரிக்கக்கூடியது. அதனால் உப்பை அதிகம் உபயோகிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருகுவது ரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கான எளிய வழிமுறையாகும். 
அபான வாயு முத்திரை பயிற்சி செய்வதும் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும். மோதிர விரலின் நுனி பகுதியும், நடு விரலின் நுனி பகுதியும், பெருவிரலின் நுனி பகுதியை தொடும்படி வைக்க வேண்டும். பின்பு ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைக்க வேண்டும். கட்டை விரலை நேராக நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையியை குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது செய்வது சிறந்த பலனை தரும்.

பிராணாயாமம் என்பது யோகா பயிற்சியின் ஒரு அங்கமான மூச்சு பயிற்சியாகும். ஹைப்பர்டென்ஷன் எனப்படும் குறைந்த ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்களுக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக அமையும்.
 தியானம் அல்லது யோகா போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடுகளில் சிறிது நேரம் ஈடுபடுவது குறைந்த ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும்.

ஊட்டச்சத்துக்கள் கொண்ட சமச்சீரான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி மற்றும் ஓய்வு இரண்டும் முக்கியம். ரத்த அழுத்தத்தைக் குறைக்க சரியான நேரத்தில் சரியான உணவை உண்ணுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!