இளமையாக வாழ்தலும் நாள்பட்ட நோய்களை தவிர்த்தலும் - டாக்டர் கொப்பேக்கி
#Health
Mugunthan Mugunthan
3 years ago
சிறியளவிலானதும் புலப்படாததுமான மாற்றங்கள் படிப்படியாக நாள்பட்ட நோய்க்கு வழிவகுக்கும். இவ்வாறு டாக்டர் கொபேக்கி கூறுகிறார். எரிவானது உடலில் ஏற்படும் ஒரு தற்காலிக பழுதடைலுக்கான அறிகுறியாகும். இந்த பழுது நிரந்தரமாக அமையின் ஒரு நாள்பட்ட நோயாக மாறும். இது உடல் எதிர்ப்புச்சக்தியை பாதித்து உடலுக்கு பல பிரச்சினைகளை கொண்டுவரும். உதாரணமாக குருதிக்கலன்கள் குறுகி தடைகள் ஏற்படுதல் ஆகும்.
உட்கொள்ளும் உணவு
- நீங்கள் உட்கொள்ளும் உணவானது மத்திய தரைக்கடல் உணவு வகைகளைச் சார்ந்ததாக இருத்தல் வேண்டும். பெரும்பாலான மரணங்கள் நாம் உண்ணும் தரம் குறைவான உணவு மற்றும் உடற்பருமனால் ஏற்படுகிறது என டாக்டர் கூறுகிறார். முக்கியமாக பீட்சா, சோடா வகைகள் மற்றும் குளிர்களி என்பனவாகும்.
- தினமும் நாம் பழவகைகள், மரக்கறி, தானியங்கள், ஆரோக்கியமான இலிப்பிட்டுகள், அதாவது ஒலிவ் எண்ணெய் மற்றும் விதைகள். ஆகியவற்றை உண்ண வேண்டும்.
- வாரந்தம் மீன், இறைச்சி, முட்டை மற்றும் சோயா போன்றவற்றை எடுக்கலாம். வீட்டில் தயாரித்த இனிப்பு வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
உடற்பயிற்சி.
- உடற்பயிற்சி நிலையங்களை மறந்து விடுங்கள். மற்றும் எமது தசைநார்களை அசைய செய்தல் எரிவை குறைக்கும். ஹோமோன் உற்பத்தியை துாண்டும். எமது இதயத்தை ஆரோக்கியமாகவும் கொழுப்பையும் குறைக்கும்.
- உங்கள் இதயத் துடிப்பை கணிசமாக உயர்த்தும் தீவிரமான செயல்களைச் செய்வது. இருந்த இடத்தில் இராது உங்கள் கதிரையிலிருந்து எழும்பி உட்காருதல் 2-3 தடவை 30-60 நிமிடங்களுக்கொரு முறை. இவ்வாறு செய்தால் நம் இதயம் சீரடையும்.
நித்திரை.
- தினமும் 8 மணிநேர துாக்கம் இரவில் தேவை. நித்திரையின் போது எமது உடலில் உள்ள கலங்கள் புதிதாக உருவாகியும் புதுப்பிக்கப்பட்ட வண்ணமும் இருக்கும் வேளையில் நச்சுக்கழிவுகளையும் வெளியேற்றும். அல்சைமர் நோய்கான புரதக்கழிவுகள் இதற்கு உதராணமாகும். துாக்கமின்மை நாள்பட்ட நோய்களுக்கும் உடல் எதிர்ப்புசக்தி பாதிப்புக்கும் ஏதுவாகும். நீங்கள் குறைவான நித்திரை இரவில் கொள்வீர்களானால் ஒரு தடுப்புசி ஏற்றியபின், உங்கள் எதிர்ப்பு சக்தி 20-25வீதம் தாழ்வடைய வாய்ப்புண்டு். நல்ல நித்திரை கொள்ள எந்நேரமும் சரியான நேரத்திற்கு துாங்க வேண்டும்.
- திரைகளை பார்த்தல், அற்ககோல், கோப்பி மற்றும் உயர்வான கலோரி உணவு இவற்றை தவிர்த்தல் வேண்டும்.
- வழமையான தியானம், இறை பக்தி, வாசிப்பு, குளியல் இவற்றை பழகிக்கொள்ளுங்கள்.
மனவழுத்தம்
- அதிக அட்ரலனின் மற்றும் கோட்டிசோன்கள் பாய்தல் டிமென்டியா, மாரடைப்பு, தொற்று நோய்கள், மனவழுத்தம், நீரிழிவு, உடற்பருமன் மற்றும் சமிபாட்டு குழப்பங்கள் ஆகியவற்றை உண்டுபண்ணும். நீங்கள் நிதானமாதலை பழக்கிகொள்ள வேண்டும்.
- எதிர்மறை எண்ணங்களை இரக்கத்துடனும் , சுய பேச்சு தன்மையையும் ஏற்றுக்கொள்ளுங்கள். நித்திரைக்கு செல்லும் முன் மகிழ்வான உங்கள் வாழ்வின் உயரிய தன்மைகளை எண்ணிப்பாருங்கள்.
- இயற்கையுடன் பொழுதை கழியுங்கள்.
புகைத்தல் மற்றும் அற்ககோல்
- புகைக்காதீர்கள். குறைவாக மது அருந்துங்கள். இ-சிகரட்டுகள் சுருட்டுகள் மிகவும் ஆபத்தானவை. புகைத்தல் உங்களை கொல்லும் முறைகள் பலது. நீக்கோட்டின் மாற்றீடு அல்லது உள சிகிச்சை மூலம் இவற்றை நிறுத்தலாம்.
- சிறிய அளவிலான அற்ககோல் இதய நோய்களை குறைக்கும். அத்துடன் நீரிழிவு மற்றும் வலிப்பு இதனையும் கூட. இவற்றை ஆறுதல் அடைவதன் மூலமும் மேற்கொள்ளலாம்.
எடை
- இதுவே உடலின் நலத்திற்கு கூடுதல் கேடு விளைவிப்பதுடன் முற்கூட்டிய மரணத்தையும் ஏற்படுத்தும். மேற்கூறிய விடயங்களை கையாள்வதன் மூலம் இதனை தடுக்கலாம்
- அடிக்கடி ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளுதல் மனவழுத்தத்தில் இருத்தலுக்கு அமைந்தாலும் அதனை தவிர்க்க இசையை கேட்டல், நடத்தல் அல்லது மது அருந்துதல் ஏதுவாக இருக்கும்.
நற்பழக்கங்களை கையாள்தல்
- உங்களுக்கு இவற்றை மேற்கொள்ள கடினமாக இருந்தால், தொழிலுக்கு செல்கையில் அங்கு உயர்த்தியை பயன்படுத்தும் போது கடைசி மாடிக்கு முதல் மாடியில் இறங்கி, பின் படிக்கட்டுகளில் ஏறி உங்கள் மாடியை அடையுங்கள்.
- சிட் அப் ஒன்று தொலைக்காட்சி பார்க்கும் வேளையில் இடைவேளையில் செய்யுங்கள்.
இவற்றை கடைப்பிடித்து வந்தால் நீங்களும் காலம் முழுக்க இளமையாகவும் நாள்பட்ட நோய்களிலிருந்தும் விடுபடலாம்.