மின்னணு மருத்துவ திட்டத்தை இன்று ஆரம்பித்து வைத்துள்ளார் பிரதமர் மோடி

Prabha Praneetha
3 years ago
மின்னணு மருத்துவ திட்டத்தை இன்று ஆரம்பித்து வைத்துள்ளார் பிரதமர் மோடி

இந்திய மக்கள் அனைவருக்கும் அவரவர் மருத்துவ தகவல்கள் அடங்கிய பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைத்துள்ளார். 

கடந்த ஆண்டின் சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, மின்னணு மருத்துவ திட்டம் நாடளாவிய ரீதியில் அறிமுகம் செய்யப்படுமென குறிப்பிட்டிருந்தார்.

அந்தவகையில் தற்போது சோதனை முயற்சியாக 6 யூனியன் பிரதேசங்களில் மின்னணு மருத்துவ திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குறித்த திட்டம்  நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட இருக்கின்றது.

இது தொடர்பில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இன்றைய தினம் இந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நவீன மின்னணு தொழில்நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற வழிவகுப்பதே மின்னணு மருத்துவ திட்டம் என பிரதமர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!