இருக்கும் வேலைவாய்ப்புகளை அழிக்கக்கூடாது: திமுகவுக்கு கமல் கோரிக்கை

Prabha Praneetha
2 years ago
இருக்கும் வேலைவாய்ப்புகளை அழிக்கக்கூடாது: திமுகவுக்கு கமல் கோரிக்கை

நல்லரசு என்பது புதிய வேலைவாய்ப்புகளை  உருவாக்கி அளிக்க வேண்டும் அல்லாது இருக்கும் வாய்ப்பை அழிக்க கூடாது என்று தெரிவித்துள்ள மக்கள் நீதி மக்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தற்காலிக செவிலியர்களை பணி நிரந்திரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா முதல் அலையும் போது தமிழகத்தில் சுமார் 3,000 செவிலியர்கள் மருத்துவ தேர்வாணையத்தால் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர்.

 இவர்களுக்கு 12,000 முதல் 14,000 ரூபாய் வரை தொகுப்பு ஊதியமாக வழங்கப்பட்டது. தங்குமிடமும் .உணவும் அரசு சார்பில் அளிக்கப்பட்டன.

கொரோனா தொற்று உச்சம் தொட்ட காலத்திலும் சரி, இப்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருக்கும்போதும் சரி, தங்களது உயிரைத் துச்சமென கருதி பொதுச்சேவைக்கு வந்தார்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள்.\

 “கருணையின் வடிவமாகவே செவிலியர்களை காண்கிறேன்” என்று இன்றைய முதல்-அமைச்சரும் மனம் நெகிழ்ந்து பாராட்டினார்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரமற்ற சூழலில், உரிய தங்கும் வசதிகள் கூட இல்லாத நிலைமையில் மருத்துவ சேவை ஆற்றி வருகிறார்கள் இந்த செவிலியர்கள், இன்றைய முதல்-அமைச்சர் அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினார்.