இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை!

Prabha Praneetha
2 years ago
இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை!

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் இருந்து பெறப்படும் பின்னூட்டங்களைப் பொறுத்து இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி அமுலுக்கு வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இந்தியாவில் சைடஸ் பூஸ்டர் டோஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அத்துடன் 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கும் அரசு முன்னுரிமை அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.