தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Prabha Praneetha
2 years ago
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும், இதுதவிர தொடர்ந்து 3 நாட்களுக்கு கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசக்கூடும் என்பதாலும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை தொடரும்.

அதன்படி, இன்று, நாளை நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 4-ந்திகதி களில் (திங்கட்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு நாளை முதல் 4-ந்தேதி வரை செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.