யாழில் இந்திய வெளிவிவகார செயலாளர் வழங்கிய உறுதிமொழி
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவித்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மத்திய கலாசார மண்டபத்தை, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா பார்வையிட்டுள்ளார்.இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள அவர், யாழ்ப்பாணத்திற்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசாரத்தை பார்வையிட்டதன் பின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கலாசார மண்டபத்தை, விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.அத்துடன், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இந்த கட்டிடத்தை பராமரிப்பதற்கான செலவினையும் இந்தியா ஏற்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் யாழ் விஜயத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.