FACEBOOK உள்ளிட்ட சமூக வலையமைப்புக்கள் செயலிழந்தமைக்கான காரணம் வெளியானது!

பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்ட்ராகிரேம் ஆகிய சமூக வலைத்தளங்கள் 6 மணித்தியாலங்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்பின.
பிரதான சேவர் கட்டமைப்பில் ஏற்பட்ட கேளாறே, இந்த பிரச்சினைக்கான காரணம் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வட்ஸ் எப் உள்ளது. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், காணொளி அழைப்பு போன்ற பல்வேறு வசதிகளை வட்ஸ் எப் வழங்கி வருகிறது. பேஸ்புக் நிறுவனம்தான் இந்த செயலியையும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று (04) இரவு 9.30 மணியளவில் இந்த மூன்று செயலிகளும் திடீரென முடங்கியதால், சமூக வலைதள பயன்பாட்டாளர்களும், இணையவாசிகளும் பெரும் தவிப்புக்குள்ளாகினர். இலங்கை மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் இந்தச் செயலிழப்பு ஏற்பட்டது.
இந்த நெருக்கடி காரணமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறித்து பேஸ்புக் நிறுவனம் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளது.
We’re aware that some people are having trouble accessing our apps and products. We’re working to get things back to normal as quickly as possible, and we apologize for any inconvenience.
— Facebook (@Facebook) October 4, 2021



