தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை

Prabha Praneetha
2 years ago
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் விளக்கம் அளித்தார்.

பருவமழைகாலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான இறுதி கட்டத்தில் தற்போது இருக்கிறது.

அதனைத்தொடர்ந்து தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும்.

இந்தநிலையில் இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.