ஒரே நாளில் 70 மில்லியன் புது வாடிக்கையாளர்களைப் பெற்ற டெலிகிராம்!

Prasu
3 years ago
ஒரே நாளில் 70 மில்லியன் புது வாடிக்கையாளர்களைப் பெற்ற டெலிகிராம்!

உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் முடங்கியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் இன்று காலை இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம் எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு இந்த கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் மார்க் சக்கர்பெர்க் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

சில மணி நேரங்களிலேயே 7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை மார்க் சந்தித்தார்.. இந்த 7 மணிநேர முடக்கத்தால் டெலிகிராம் நிறுவனம் நல்ல பலனைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 70 மில்லியன் புதிய பயணர்கள் அந்த நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளார்களாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!