நாவூறும் சுவையில் பப்பாளி அல்வா.
Prabha Praneetha
3 years ago
தேவையான பொருட்கள்
முழு பப்பாளி - 1
பால் - 250 கிராம்
நெய் - 1 ஸ்பூன்
வெல்லம் - 1 கப்
முந்திரி , பூசணி விதை - கையளவு
தேங்காய் துருவியது - 2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
செய்முறை :
- பப்பாளியை நன்கு கட்டிகளின்றி மசித்துக் கொள்ளவும்.
- பாலை நன்கு காய்ச்சி கொள்ளவும்.
- கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் மசித்து வைத்துள்ள பாப்பாளியை கொட்டி கிளறவும். தண்ணீர் வற்றியதும் காய்ச்சிய பாலை ஊற்றவும்.
- அடி பிடிக்காமல் இருக்க கிளறிக் கொண்டே இருக்கவும். குறைந்த தீயில் வைத்துக்கொள்ளவும்.
- அதேசமயம் மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை உருக வைத்துக்கொள்ளுங்கள். உருக்கியதும் அதை அல்வாவில் கொட்டி கிளறவும்.
- தண்ணீர் வற்றி தளதளவென கெட்டியாகும் போது அடுப்பை அணைத்துவிடவும்.
- மற்றொரு கடாயில் நெய் விட்டு முந்திரி மற்றும் பூசணி விதைகளை சேர்க்கவும். அடுத்ததாக துருவிய தேங்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். அதை தற்போது கிளறி வைத்துள்ள அல்வாவில் கொட்டவும்.
சுவையான பப்பாளி அல்வா தயார்.