சிவப்பு நிற ஆடைகள் அனைவரையும் அழகாக காட்டுவதற்குக் காரணங்கள் என்ன?
சிகப்பு நிறம் நாம் பார்க்கும்போது நமது இதயத்துடிப்பு சுவாசத்தின் வேகம் எல்லாமே கூடும். சிகப்பு நிறம் ஒரு பொருளில் ஒருவர் உடையில் நாம் பார்க்கும்போது இது அத்தனையும் நடக்கும்.
ஒரு காதலினால் கவர்ச்சி போன்றவற்றாலும் இதயத்துடிப்பு கூடும். நான் என்ன சொன்னேன் அபாயம் என்னும் எச்சரிக்கை காட்டுவதும் சிவப்பு நிறம் தான். சிவப்பு நிறத்தின் மூலமாக இதயத்துடிப்பு ஏறும்போது அந்த நிறம் எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம்.
அந்த நிறம் வருவது ஒரு காயத்திலிருந்து அல்லது ஒரு டிராபிக் சிக்னல் என்றால் நம் மனம் உணர்ந்து அதற்கேற்றார் போல் செயல்பட ஆரம்பிக்கும்.
ஆனால் அந்த சிகப்பு நிறம் வரும் ஒரு காயத்திலிருந்து ஏற்படவில்லை என்று ஊர்ஜிதம் ஆனபின் மனம் அந்த சிவப்பு நிறம் எங்கிருந்து வருகிறதோ அதை அபாயம் இல்லை என்று தெரிந்த உடன் அந்த உயர் ரத்த அழுத்தம் இதயத்துடிப்பு அனைத்தும் கவர்ச்சியின் காரணமாக விளைகிறது என்று மனம் எடுத்துக்கொள்ளும். நிறம் மறைந்துள்ள நபர் கவர்ச்சியாக இருக்கிறார் அதனால் தான் நம் இதயம் வேகமாக துடிக்கிறது என்று நம் மனம் எடுத்துக்கொள்வதால் சிவப்பு நிறம் காதலுக்கும் காமத்துக்கும் ஏன் பசியின் அடையாளமாகக் கூட மனம் எடுத்துக்கொள்ளும்.
ஸ்கார்லெட் சிவப்பு ஒரு வகையான சிகப்பு. ஆண்மை ஆளுமை கவர்ச்சி எல்லாவற்றுக்கும் ஒரே நிறம் சிகப்பு தான். அதனால் தான் சிகப்பு அணிந்திருப்பவர் மிகவும் கவர்ச்சியாக நம் கண்களுக்குத் தெரிவார். ரஷ்ய மொழியில் சிகப்பு என்றால் அழகு என்று அர்த்தம். சிகப்பு சிகப்பு நிறம் நில் என்று சொல்வதற்கும் பயன்படும். சிகப்பு நிற பூ ஓகே என்று சொல்வதற்கு அது காதலுக்கு ஒகே சொல்வதற்கும் பயன்படும்.
சிகப்பு நிறத்தின் அலை நீளம் மிக அதிகம். ஒரு குழந்தை முதன் முதலில் பார்க்கும் நிறம் சிகப்பு. சிகப்பு என்பது ஒரு பிசிகல் கலர். அதீத நிலைகளை காட்டும் நிறம் சிகப்பு. இப்படி எல்லாவிதமான கவர்ச்சிக்கு தேவையான அத்தனை பண்புகளும் சிகப்பு நிறத்தில் அடங்கியுள்ளதால் மனம் சிகப்பு நிறத்தை பார்த்தவுடன் உடனடியாக ஈர்க்கப்படுகிறது.. இதுதான் சிகப்பு நிறத் தின் கவர்ச்சிக்கான உளவியல் காரணம். நீங்கள் ஒருவரை கவிழ்க்க வேண்டும் அதாவது காதலில் கவர்ந்து இழுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் அணிய வேண்டிய நிறம் சிவப்புதான்!