முற்றிய சர்க்கரை நோயும் முழுமையாக நீங்க மூலிகை வைத்தியம்

Prabha Praneetha
3 years ago
முற்றிய சர்க்கரை நோயும் முழுமையாக நீங்க மூலிகை வைத்தியம்

தேவையான பொருள்கள்

வெள்ளறுகு

முடக்கற்றான்

சிறுகுறிஞ்சான்

நாவல் கொட்டை

இவைகளை சம அளவாக பொடி செய்து ஒன்றாக கலந்து கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து இதை வெந்நீரில் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாத தீராத சர்க்கரை நோயும் இந்த பச்சிலை வைத்தியத்திற்கு கட்டாயமாக கட்டுப்படும்

குறிப்பாக பச்சிலை வைத்தியத்தை மேற்கொள்ளும் பொழுது கண்டிப்பாக உப்பு புளி காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்

சர்க்கரையின் அளவை பாகற்காய் குறைக்கும் என்பதற்காக பச்சிலை மருந்தை உண்ணும் காலங்களில் உணவில் பாகற்காயை கட்டாயமாக சேர்த்து கொள்ளக் கூடாது

ஏனெனில்

பத்தியத்திற்கு பாகற்காய் எதிரி

இது சித்தர்களின் அருள்வாக்கு

உடலில் இருக்கும் நோய்களை தீர்த்து கொள்ள பச்சிலை மருந்தை உண்ணும் பொழுது பாகற்காயை உணவில் சேர்த்து கொண்டால் எந்த பச்சிலை வைத்தியமும் நல்ல பயனை தராது இது உண்மை

பாகற்காய்க்கு மருத்துவ குணத்தை கெடுக்கும் குணம் அதிகமாக உள்ளது

அதை போல

ஏதாவது ஒரு நோயின் தாக்கம் உடலில் ஏற்பட்டு விட்டால் அப்பொழுது வெள்ளை பூசனிக்காயை உணவில் சேர்த்து கொள்ள கூடாது

இதற்கு காரணம் யாதெனில்

வெள்ளைப் பூசனிக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் இது நோய் எதிர்ப்பு சக்தியை குறைந்து விடும் தேரையர் சித்தரின் தெளிவான விளக்கம் இது

சர்க்கரை நோய் வந்துவிட்டால் நடைப்பயிற்சி வேண்டும் ஆனால் காலில் செருப்பணிந்து நடக்கக் கூடாது அப்படி நடந்தால் அதனால் எந்தப் பயனும் உடலுக்கு ஏற்படப் போவதில்லை

செருப்பணிந்து நடந்தால் கால்கள் சமமான கோணத்தில் இருப்பதில்லை

மேலும்

கால்களின் பாதத்தில் உள்ள வர்ம புள்ளிகள் செருப்பணிந்து நடப்பதால் தூண்டப்படுவதும் இல்லை அதனால் செருப்பு அணியாமல் நடந்தால் வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு அதன் மூலம் பல நோய்கள் குணமாகும் அதில் சர்க்கரை நோயும் அடங்கும்

மனதில் சர்க்கரை நோயைப் பற்றிய அச்சம் இல்லாமல் துணிந்த மனதுடன் வாழ்ந்து வந்தால்

சர்க்கரை நோயும் சளி காய்ச்சல் போல ஒரு சாதாரண நோய் தான்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!