அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்பு

Prabha Praneetha
2 years ago
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்பு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன வயது உச்ச வரம்பை, 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த உச்ச வரம்பு, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முதல் 
வரை, சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல், ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுவதகாவும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆக இருந்தது.

ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில், அதற்கு ஓராண்டு முன் வரை நியமனம் செய்யலாம் என்ற அரசாணை பின்பற்றப்பட்டு வந்தது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி, 59 வயது வரை பணி நியமனம் மேற்கொள்ளலாம் என பட்டதாரிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கு மாறாக ஆசிரியர்களின் வயது வரம்பை 40 என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் நியமன வயது வரம்பை உயர்த்துவது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!