பேஸ்புக் நிறுவனத்துக்கு 50 மில்லியன் பவுண்ட் அபராதம்
#Facebook
Prasu
3 years ago
பேஸ்புக்குக்கு இங்கிலாந்து 50 மில்லியன் பவுண்ட் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூகவலைதளங்களின் அரசனாக விளங்குவது பேஸ்புக். உலகமெங்கும் பல கோடி மக்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக்கில் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக புகார்கள் ஆரம்பம் முதலே எழுந்த வண்ணம் உள்ளது.
பேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடுகிறது, ஒரு சார்பாக செயல்படுகிறது என உலகமெங்கிலும் பல சர்ச்சைகளில் பேஸ்புக் சிக்கியது. பேஸ்புக் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஒகலஸ் போன்ற துணை நிறுவங்களை கொண்டுள்ளது.
இந்நிலையில் பேஸ்புக் தனது தனியுரிமை கொள்கைகளை மீறியதாக இங்கிலாந்து பேஸ்புக் நிறுவனத்துக்கு 50 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.