பெண்களின் தலைவலி

#Health
பெண்களின் தலைவலி

தலைவலியில் பல வகைகள் உண்டு. இவற்றில் செர்விகோஜெனிக் ஹெட்டேக் (Cervicogenic headache) தலைவலி பெண்களிடம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் இதை பெண்களின் தலைவலி என்று கூட சொல்லலாம். ஒற்றைத்தலைவலி ஏற்பட்டால் தலையின் ஒரு பகுதி வலிக்கும். ஆனால், செர்விகோஜெனிக் தலைவலி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கழுத்து வலியுடன் சிறிது எரிச்சலாகத் தோன்றும்.

ஏதாவது ஒரு வாசனை, அதிக சத்தம், அதிர்ச்சி,மன அழுத்தம் மற்றும் பிடிக்காத விஷயங்கள் நடக்கும் போதும் செர்விகோஜெனிக் தலைவலி தொற்றிக் கொள்ளும்.
அதிக நேரம் சமையலறையில் வேலை பார்ப்பவர்கள், அழகுக்கலை பணியில் இருப்பவர்கள், அதிக நேரம் பயணிப்பவர்கள், டெய்லரிங், எம்ப்ராய்டரி வேலையில் உள்ள பெண்களுக்கு இந்த ரக வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

செர்விகோஜெனிக் தலைவலி இருக்கும்போது குமட்டல் உண்டாகும், வாந்தி ஏற்படும், ஒரு வித எரிச்சல் உண்டாகும். எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது. கையில் தோள்பட்டை பகுதியிலும் வலி உண்டாகும். கழுத்துப் பகுதியில் பலமிழந்தது போல சோர்வாகவும் இருக்கும். இது சில சமயம் பெண்களுக்கு மன அழுத்தத்தையும் உண்டாக்கும்.

செர்விகோஜெனிக் தலைவலியைத் தவிர்ப்பதற்கு, தலைவலி ஏற்படும் சூழல்களைத் தவிர்ப்பது அவசியம். அதிக நேரம் வெயிலில் இருப்பது, வெப்பமான சூழலில் வேலை செய்வது, அதிக சத்தம் கேட்பது, ஒவ்வாதபெர்ஃப்யூம் வாசனைகளைத் தவிர்ப்பது நல்லது. இதேபோல் அடர் வண்ணங்கள், இரவு நேரப் பயணம் என எதனால் உங்களுக்குத் தலைவலி ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு அந்த சூழல்களை விலக்க வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் சிறிய கழுத்து வலியும் சில நிமிடத் தலைவலியும் இருக்கும். அப்போது ஃபேன் அருகில் அமர்ந்தும், ஒரு காபி குடித்தும் அதை சரி செய்து கொள்ள முடியும். நாட்கள்செல்ல செல்ல இந்தத் தலைவலி அரை மணி நேரம் வரை நீளும். தலைவலியில் துவங்கி உடல் முழுக்க வலியை உண்டாக்கும். எந்த வேலையும் செய்ய எனர்ஜி இல்லாதது போலச் சோர்வாக உணரச் செய்யும். மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.

எரிச்சலூட்டும் மன நிலைக்குக் காரணம் ஆகும். மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் செர்விகோஜெனிக் தலைவலியில் இருந்து விடுபடலாம். முதலில் இதற்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கப்படும்.இந்த மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தத் தலைவலியிலிருந்து விடுபடலாம்.

செர்விகோஜெனிக் தலைவலியை கண்டுகொள்ளாமல் விடும் போது கழுத்தைச் சுற்றிலும் வலி முடிச்சுக்கள் ஏற்படும். செர்விகோஜெனிக் தலைவலிக்கு பிசியோதெரபி சிகிச்சையில் நல்ல நிவாரணம் உண்டு. Triggering என்கிற தெரபியின்மூலம் வலி முடிச்சுக்கள் குணப்படுத்தப்படும். இந்த சிகிச்சையில் வலி முடிச்சுக்கள் தூண்டப்பட்டு சரி செய்யப்படுகிறது. தொடர் சிகிச்சைகள் மூலம் செர்விகோஜெனிக் ஹெடேக்பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!