இந்தியா உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு

#India
இந்தியா உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு

கேரளாவைத் தொடர்ந்து மலைப்பிரதேச மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டிலும் கனமழையும், நிலச்சரிவும் ஏற்பட்டது.  நைனிடால் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். 224 வீடுகள் சேதமடைந்தன. மீட்புப்பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை விரைவுப்படை, மாநில போலீசார் ஈடுபடுத்தப்பட்டன.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சிக்கி இதுவரை 72 பேர் பலியாகியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 4 பேர் மாயமாகியுள்ளனர். 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!