1970ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் ஆண்டிற்கு இடையில் பிறந்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை!

Reha
3 years ago
1970ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் ஆண்டிற்கு இடையில் பிறந்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை!
  • காலை எழுந்ததும் உடல் சூட்டுக்கு அடுப்பின் பக்கத்தில் போயி நிற்ப்போம் அம்மா விரட்டும் வரை
  • காலையில் கரி கொட்டையில் சுத்தமாக பல் விழக்குவோம்.....
  • மாலையில் குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
  • ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு  செம்மன் சாலையில்  நடந்தே சென்றோம்…
  • ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே.. ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…
  • பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…
  • விளையாட்டில் கூட மலாய் ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…
  • மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…
  • மாலையில் கள்ளுக்கடையில்  கள் குடித்து விட்டு அமதியாய் கொஞசம் ஆடிக்கொண்டும் வருவார்கள் பெரியவர்கள் ....
  • உதிரியாக வாங்கிய ஒரு சாமந்தி பூவை தலையின் பக்கவாட்டில் வைத்து படம் பிடித்த பெண்கள் அதிகம்.....
  • சனிக்கிழமையன்று குறைந்தபட்சம்  டீவி 2 தமிழ் படம் பக்கத்து வீட்டுக்கு சென்று  ஒன்றாக அமர்ந்து பார்த்தோம்…
  • அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…
  • ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…
  • அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…
  • ஞாயிற்று கிழமை ஒரு வீட்டில் ஓடும் வீடியோவை  கூட்டமா அமற்ந்து பார்த்து  இருக்கிறோம்…
  • சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை இரவில் திடலில்  திரைப்படம் பார்த்தோம்...
  • ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…
  • உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் எப்ப தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…
  • பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…
  • ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…
  • பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை பள்ளிக்கூடத்தில் கூட வாங்கி எழுதி  நண்பர்களுக்கு தெரியாமல் பேக்கில் வைத்தோம்
  • நம் அக்காவும் தங்கையும் இரட்டை சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…
  • பணக்கார வீட்டு இளம் பிள்ளைகள் Hero சைக்கிள் வைத்திருந்தார்கள்…
  • 10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…
  • கரண்ட் இல்லாமல் குப்பி விளக்கில் தான் படித்தோம்.....
  • வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…
  • வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால் கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்
  • 10க்கு 7 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…
  • பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
  • கிணற்றில் மற்றும் ஆற்றில்  குளிக்கும் துணி துவைக்கும் பழக்கம் இருந்தது…
  • பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
  • அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது .
  • மரத்தால் ஆன மேஜையில் தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…
  • 12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…
  • இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…
  • உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் மன நிறைவான வாழ்க்கை
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!