பனங்கற்கண்டு சாப்பிட்டதுண்டா?

#Health
பனங்கற்கண்டு சாப்பிட்டதுண்டா?

பனங்கற்கண்டு சாப்பிட்டவுடன் உடனடியாக ஆற்றலைத் தரக் கூடியது. நல்ல செரிமான சக்தியைத் தூண்டும். ரத்தத்தைச் சுத்தம் செய்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்குகிறது. உடல் சோர்வை நீக்கி, புத்துணர்வைத் தருகிறது. நினைவாற்றலையும் பெருக்குகிறது. இதில் நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது.  

கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மக்னீசியம், காப்பர், ஜிங்க், இரும்புச்சத்து போன்ற தாது சத்துக்களும், நோய் எதிர்ப்புத் திறனுக்குக் காரணமான ஆன்டி ஆக்ஸிடென்ட்டும் பனங்கற்கண்டில் அதிகம் இருக்கின்றன.

பனை மரத்தின் பயன்கள் ஏராளம். "பாமிரா பாம்' என்ற அறிவியல் பெயர் கொண்ட பனை மரம், யாழ்ப்பாணத்தில் அதிகம் காணப்படுகிறது. இதன் மரம், இலை, நுங்கு, இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உபபொருட்கள், என, 800 வகைகளில் மனிதர்களுக்கு பயன் அளிக்கிறது.
அதில் இருந்து தயாரிக்கப்படும் உபபொருட்களில் முக்கியமானது, பனங்கற்கண்டு. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி பெறப்படும் இது, பழங்காலம் முதலே, மருத்துவ ரீதியாக தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதில், 24 வகையான இயற்கைச் சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோயின் பிடியிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு பனங்கற்கண்டு பேருதவி புரிகிறது. வாதம், பித்தம் நீக்கவும், பசியை தூண்டி விடவும் பயனுள்ள மருந்து. உடலுக்கு புஷ்டி தருகிறது. நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பலவற்றில் இது சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து கூட்டங்களில் பேச வேண்டிய கட்டாயம் இருக்கும் பேச்சாளர்களுக்கு பிடித்தமானது பனங்கற்கண்டு.

பனங்கற்கண்டில் இருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்கிறது. பற்களில் ஏற்படும் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து, உடல் பித்தத்தை நீக்குகிறது. சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் போக்குகிறது.
கண் நோய், ஜலதோஷம், காசநோய் ஆகியவற்றுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பனங்கற்கண்டு, பசும்பால், மிளகு கொண்டு தயாரிக்கப்படும் பால், தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது.
முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கருநிற பனைவெல்லம், கருப்பட்டி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக மாற்றும்போது, பனங்கற்கண்டு கிடைக்கிறது.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால், மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி ஆகியவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் சூடு ஆகியவற்றை தணிக்க, பேருதவி புரிகிறது.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாகும்.
பனை நீரிலுள்ள சர்க்கரைச்சத்து, உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ், மெலிந்த உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி, நல்ல புஷ்டியை தரும் தன்மை கொண்டது.

கருவுற்ற பெண்களின் உடல் உபாதைகளை போக்குவதில், பனங்கற்கண்டுக்கு தனியிடம் உண்டு. ரத்த அழுத்தத்தை சீராக்கும் சக்தி வாய்ந்தது. டைபாய்டு, நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. இதை பாலுடன் கலந்து உட்கொள்ளும்போது, இருதய நோய் குணமாகும்; இருதயமும் வலுப்பெறும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!