முகப்புத்தகத்திலிருந்து நீக்கப்படவுள்ள முக்கிய வசதி

#Facebook
Prasu
3 years ago
முகப்புத்தகத்திலிருந்து நீக்கப்படவுள்ள முக்கிய வசதி

முகப்புத்தக செயலியில் உள்ள முகத்தை அடையாளம் காணும் முக அங்கீகார வசதியை (Facial Recognition) நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மெட்டா என அண்மையில் தனது பெயரை மாற்றிக் கொண்ட Facebook நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த முக அங்கீகார வசதியால் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முகப்புத்தக செயலியில் உள்ள முக அங்கீகார (Facial Recognition) வசதி மூலம் புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றில் உள்ள பயனர்களின் முக அடையாளம் தானாக அங்கீகரிக்கப்படும்.

குறித்த வசதியை பயன்படுத்தும் பயனரொருவரின் முக ரேகை கொண்ட புகைப்படங்கள், காணொளிகள் முகப்புத்தக செயலியில் பதிவேற்றப்பட்டால் அது தொடர்பிலும் உடன் தகவல் கிடைத்து விடும்.

இந்த நிலையிலேயே குறித்த வசதியால் தனியுரிமை பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!