புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் மீன்?

Prasu
2 years ago
புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் மீன்?

ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை உண்டால் புற்றுநோய், உடல் உபாதைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.இம்மீனை சாப்பிட வேண்டாம் என இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் தற்போது இந்த மீனை ஏன் சாப்பிட கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்

ஆப்பிரிக்க கெளுத்தி மீனின் விலங்கியல் பெயர் 'Clarias Gariepinus ஆகும். இந்த வகை மீன்கள் 'ஏலியன்கள்' என்று அழைக்கப்படுகின்றன.இவை உள்ளூர் நீர்நிலைகளில் கலந்து நதிகள், குளம் குட்டைகளில் வியாபித்து தற்போது நமது மாநிலத்தில் இருக்கும் உள்ளூர் மீன் வகைகளை கொன்றொழித்து விடுகின்றன.

இந்த வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள், தான் வாழ்வதற்காக பிற மீன்களை கொன்று திண்ணும் தன்மை கொண்டவை.
இவ்வகை மீன்கள் கிடைக்காவிட்டால், பாசி போன்ற நீர்நிலைகளில் இருக்கும் தாவரங்களை உண்டும் பிழைக்கும். எனவே இவை carnivorous மற்றும் omnivorous ஆக மாறும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.பல நேரங்களில் தன் இனத்தையே வேட்டையாடி உண்ணும் முறையையும் கடைபிடிக்கின்றன.

இவ்வகை கெளுத்தி மீன் ஒரு சீசனுக்கு நான்கு லட்சம் முட்டைகள் போடும். ஆனால், நம் நீர்நிலைகளில் உள்ள கெளுத்தி வெறும் 7,000 முதல் 15,000 முட்டைகளை மட்டுமே போடுகின்றன.இவ்வகை மீன்கள் குறைவான ஆழத்தில் சேற்றில் கூட வளரும் தன்மை கொண்டவை. ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும் தண்ணீரில் கூட பல நாள்கள் உயிர் வாழும். வறண்டு போன நிலத்தில் கூட காற்றைக் குடித்து உயிர் வாழும் தன்மை கொண்டது. சாக்கடையில் கூட வாழும் தன்மை இதற்கு உண்டு.

இந்த மீன்களை உண்டால் என்ன ஆகும் ?

இவ்வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள் மிக அதிகமான அளவில் அபாயகரமான அளவில் இருக்கின்றன
இவற்றை உண்ணும் நமக்கு உலோகங்கள் ரத்தத்தில் சேர்ந்து அதனால் புற்றுநோய் / உடல் உபாதைகள் உருவாகும் ஆபத்து அதிகமாகிறது.
மேலும், இந்த வகை மீன்களை விற்பதும் வாங்குவதும் நமது ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் செயலாக அமையலாம்.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!