வாட்ஸ் அப் வெப் பயன்படுத்த இனி இண்டர்நெட் வேண்டாம்

Prasu
3 years ago
வாட்ஸ் அப் வெப் பயன்படுத்த இனி இண்டர்நெட் வேண்டாம்

உங்களுடைய ஸ்மார்ட்போன் ஆன்லைனில் இல்லாமலேயே நீங்கள் வாட்ஸ் அப் வெப்பை பயன்படுத்தும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே வாட்ஸ் அப் நிறுவனம் இதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது அதில் அந்நிறுவனம் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது நடைமுறையில் இருக்கும் அப்டேட்டில் வாட்ஸ் அப் வெப்பை நீங்கள் பயன்படுத்த, உங்களுடைய போன் ஆன்லைனில் இருப்பது அவசியம். அப்போது தான் உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை பார்க்கவோ, படிக்கவோ முடியும். மேலும் நீங்களும் மற்றவர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பவும் இயலும்.

ஆனால் புதிய அப்டேட்டின் படி, உங்களுடைய முதன்மை இணைப்பு கருவியான ஸ்மார்ட்போன் ஆன்லைனில் இருக்க தேவையில்லை. ஒருமுறை நீங்கள் வாட்ஸ் அப் வெப் உடன் இணைந்துவிட்டீர்கள் என்றால் போதும். ஸ்மார்ட்போன் ஆன்லைனில் இல்லையென்றாலும் நீங்கள் தகவல் பரிமாற்றத்தை கணினி மூலம் தொடரலாம்.

இந்த வசதி இன்னும் வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில் தான் உள்ளது. இதை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தங்களுடைய வாட்ஸ் அப்பை பீட்டா வெர்ஷனுக்கு லிங்க் செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய அனைத்து இணைப்பு கருவிகளில் இருந்து வெளியேற வேண்டும், மீண்டும் இணைய வேண்டும். அதை தொடர்ந்து இந்த வசதி உங்களுடைய வாட்ஸ் அப்புக்கு கிடைக்கும்.

ஆண்டுராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஐ.ஓ.எஸ் தளத்தில் நீங்கள் தகவல்களை டெலிட் செய்ய இயலாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!