சென்னையில் அதிகனமழைக்கு காரணம் என்ன?

#India
சென்னையில் அதிகனமழைக்கு காரணம் என்ன?

சென்னையில் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பின போது கனமழை எச்சரிக்கை எதுவும் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும் போது, அதிகனமழை பெய்தது எப்படி? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

வானிலை நிகழ்வு, காற்றின் போக்கை கணிக்கும்போது நேற்று (நேற்று முன்தினம்) செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருந்தது. சென்னைக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. ஆனால் நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவு மிக குறுகிய காலத்தில் இரவு 10 மணி வரை 3 செ.மீ., நள்ளிரவு 1 மணி முதல் 1.45 மணி வரை 6 செ.மீ., நேற்று அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இது ‘மெசஸ்கேல் பிலாமினா' நிகழ்வாக சொல்லப்படுகிறது. இதனை முன்பே கணிக்க முடியாது.

உதாரணத்துக்கு சொல்லவேண்டும் என்றால், நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இந்த 2 இடங்களுக்கு இடைபட்ட 20 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மழை அளவு வித்தியாசப்பட்டு இருப்பதை பார்க்கலாம். காலம் மற்றும் தூர அளவில் வெகு குறுகிய காலத்தில் இதுபோல் அதிகனமழை பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!