பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

#Health
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

முதுமைக்கான அறிகுறியை வெளிப்படுத்தும் சரும சுருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இளமையை பாதுகாக்கலாம். சரும அழகையும் மெருகேற்றிக்கொள்ளலாம். அதற்கு பீட்ரூட் உதவுகிறது. இதனை உட்கொண்டால் ஹுமோகுளோபின் அளவு அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும். சமீபத்திய ஆய்வு ‘‘தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகுவது ஆரோக்கியத்தோடு இளமையை பாதுகாக்க உதவும். மூளையின் செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு அரணாகவும் விளங்கும்’’ என்று குறிப்பிடுகிறது.

முதுமையை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று, நைட்ரிக் ஆக்ஸைடு. வயது அதிகரிக்கும்போது நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தி குறைய தொடங்கும். அதன் காரணமாக ஆரோக்கியம், அறிவாற்றல் திறன் குறையும். ரத்த நாளங்களின் செயல்பாடும் பாதிப்புக்குள்ளாகும். அதனால்தான் வயதானவர்கள் நினைவுத்திறன் குறைவு, இதயம் சார்ந்த வாஸ்குலர் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பீட்ரூட்டில் கனிம நைட்ரேட் உள்ளது. அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் உதவி யுடன் நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள எக்செட்டர் பல்கலைக்கழகம், ஆரோக்கியமான நிலையில் இருக்கும் முதியோர்களை இரு குழுவாக பிரித்து ஆய்வு மேற்கொண்டது. ஒரு குழுவினருக்கு மட்டும் நைட்ரேட் நிறைந்த பீட்ரூட் சாறு தினமும் இரண்டு முறை வழங்கப்பட்டது. ஆய்வின் முடிவில் பீட்ரூட் ஜூஸ் பருகியவர்களிடம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நல்ல பாக் டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடம் நோய்த்தொற்று பாதிப்புகளும் குறைந்திருந்தது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் அனி வனதாலோ கூறுகையில், ‘‘உணவில் பீட்ரூட் போன்ற நைட்ரேட் நிறைந்த உணவுகளை சேர்ப்பது சரும நலனுக்கு நல்லது. அதன் மூலம் 10 நாட்களில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை மேம் படுத்த முடியும். அது பல்வேறு வகைகளில் உடலுக்கு நலனை ஏற்படுத்தி, இளமையை பாதுகாக்க உதவும். இளைஞர்கள் மற்றும் வயதானவர்களிடையே வாய்வழி பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒப்பிட்டு முந்தைய ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் நைட்ரேட் நிறைந்த உணவை பரிசோதித்த வகையில் எங்களின் ஆய்வு சிறப்பானதாக அமைந்திருக்கிறது’’ என்கிறார்.

முதுமையிலும் ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்பினால் தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் பருக வேண்டும். இது ஹீமோகுளோபின் அளவை சீராக நிர்வகிக்க உதவும். ரத்த சிவப் பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்யும். சாலட், பொரியல், குழம்பு என ஏதாவதொரு வகையில் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!