ஆளி விதையின் நன்மைகள் பற்றி அறிவீர்களா?

#Health
ஆளி விதையின் நன்மைகள் பற்றி அறிவீர்களா?

மஞ்சள் மற்றும் காவி நிறம் என இருவகை ஆளி விதைகள் உள்ளன. இவை இரண்டும் ஒத்த ஊட்டச்சத்து உள்ளவை. ஓமேகா – 3, கொழுப்பு அமிலங்கள் கொண்டது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். அதிகளவில் உட்கொண்டால் வயிறு மற்றும் குடல் பகுதிகள் நல்லவிதமாக இருக்கும்.

உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து இல்லாதபோது அதிகமாக உட்கொள்ளும்போது குடல் அடைப்பு ஏற்பட நேரிடும். ஆளி விதையின் எண்ணெய் தோல் பிரச்னையைப் போக்கும். இதை இரவில் ஊற வைத்து, காலையில் சுண்டலாக சாப்பிடலாம். இதயத்திற்கு நல்லது. மூளையின் சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும்.

100 கிராம் ஆளி விதை, 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. ஆளி விதையில் லிக்னன்ஸ் நார்ச்சத்து, ஓமேகா – 3 என்ற கொழுப்பு அமிலம் ரத்தக் குழாய்களைச் சுத்தம் செய்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இதில் நார்ச்சத்து உள்ளதால் பெருங்குடலில் உள்ள அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதுபோல் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் ஆளி விதை பாதுகாக்கிறது. மார்பகப் புற்றுநோய் புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன், ஆளி விதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!