மருந்தாகும் உணவு - நார்த்தை இலைப் பொடி
#Health
Mugunthan Mugunthan
3 years ago
ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கியமான காய் வகை, எலுமிச்சைக் குடும்பத்தைச் சேர்ந்த நார்த்தங்காய். காய் மட்டுமல்ல, இதன் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது. எலுமிச்சை வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் சிட்ரிக் அமிலம் அதிகமிருக்கும். அதனால், வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும்.
`நார்த்தங்காய்’ என்றவுடன், பலருக்கும் நினைவுக்கு வரும் ரெசிபி ஊறுகாய்தான். பல்வேறு நன்மைகளைக்கொண்டது என்ற போதிலும், ஊறுகாயை இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால், நார்த்தை இலைப் பொடிக்கு அப்படியான எந்த வரைமுறையும் கிடையாது. அனைவரும் சாப்பிடலாம்
பயன்கள்:
- உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற பிரச்னைகள் குணமாகும்.
- செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.
- வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்தப் பொடி சிறந்த மருந்து.
- குடல் பிரச்னைகள் சரியாகும்.
- இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், அயோடின், நார்ச்சத்துகள் நிறைந்தது என்பதால் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கான மிகச்சிறந்த மருந்து இது.
- நார்த்தையிலுள்ள செலினியம் சத்து, மூளையின் செயல்பாடுகளைத் தூண்டிவிடும். எனவே, சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட முடியும்.
- மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- இந்தப் பொடியை தினமும் சாப்பிட்டால் வாந்தி உணர்வு கட்டுப்படும் என்பதால் கர்ப்பிணிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.
- அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
- புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் குறையும்.
- ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும்.
- சிறந்த வலி நிவாரணியாக நார்த்தை இருக்கும். உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கும்கூட நார்த்தை தீர்வளிக்கும்.
- எலும்பு சார்ந்த பிரச்னைகள் தடுக்கப்படும். குறிப்பாக, மூட்டுவலியை முழுமையாகத் தவிர்க்கலாம்.