கழிவறையில் அதிக நேரம் செலவிட்டால் ஏற்படும் ஆபத்து
Keerthi
3 years ago
கழிவறையில் அதிக நேரத்தை செலவிடும் பழக்கம் அண்மைக்காலமாக மக்களிடையே அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக பலர் கழிவறையில் தொலைபேசியைப் பயன்படுத்துவது, புத்தகங்களை படிப்பது, கேம் விளையாடுவது உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கடுமையான உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக மூல நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் பிரித்தானியாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் கழிப்பறையில் தொலைபேசியை பயன்படுத்துவதால் தொலைபேசியின் மேற்பகுதில் கிருமிகள் பன்மடங்கு அதிகரிப்பதாகவும், எனவே 10 நிமிடங்களுக்கு மேல் கழிவறையில் செலவிட கூடாது எனவும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.